புதுவித இணைய மோசடி: காவல்துறை எச்சரிக்கை

2 mins read
d91d9050-88e3-421f-bc43-b485272e058b
-

போக்­கு­வ­ரத்­துக் குற்­றங்­கள் எனக் கூறி அப­ரா­தம் கட்­டச் சொல்­லும் புது­வித மோச­டியை காவல்­துறை கண்­டு­பி­டித்­துள்­ளது. இதன்­படி, ஒரு­வர் போக்­கு­வ­ரத்­துக் குற்­றம் புரிந்­துள்­ள­தா­க­வும் அதற்­கேற்ப அவர் அப­ரா­தம் கட்ட வேண்­டி­யுள்­ள­தா­க­வும் அந்த நப­ருக்கு குறுந்­த­க­வல் கிடைக்­கும். அதைக் கட்­டத் தவ­றி­னால் அவர் கூடு­தல் அப­ரா­தம் கட்ட வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கும்.

இதி­லுள்ள ஒரு தொடர்­பின் மூலம் அந்த நபர் ஒரு போலி­யான இணை­யத்­த­ளத்­திற்கு இட்­டுச் செல்­லப்­பட்டு அங்கு அப­ரா­தம் கட்­டும்­படி கூறப்­ப­டு­வார்.

மேலும் அவரது வங்­கிக் கணக்கு குறித்த விவ­ரங்­கள், அவ­ரு­டைய பாது­காப்பு குறி­யீடு, ஒரு முறை பயன்­ப­டுத்­தப்­படும் மறைச்­சொல் ஆகி­ய­வற்றை அந்த இணை­யத்­த­ளம் கேட்­கும்.

இந்த மோசடி குறித்த காவல்­துறை அறி­வு­ரை­யில், ஒரு­வர் உண்­மை­யி­லேயே போக்கு

வரத்து குற்­றம் புரிந்­தி­ருந்­தால், அவ­ரைப் போக்­கு­வ­ரத்து காவல் துறை தொடர்­பு­கொண்டு குற்­றம் புரிந்த ஓட்­டு­ந­ரின் விவ­ரங்­களை முத­லில் கேட்­கும் என்று கூறி­யது. பின்­னர் குற்­றம் புரிந்­த­தா­கக் கூறி அந்த ஓட்­டு­ந­ருக்கு நோட்­டீஸ் அனுப்­பப்­படும்.

இதில் மின்­னி­லக்க முறை­யில் காவல் துறை­யி­னர் நோட்­டீஸ் அனுப்­பு­வ­தில்லை என்­பதை காவல் துறை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

மோச­டி­க­ளைத் தடுப்­ப­தா­கக் கூறி 'ஸ்கேம்­ஷீல்ட்' எனப்­படும் போலி மோச­டித் தடுப்பு செயலி பற்றி பொது­மக்­க­ளுக்கு காவல் துறை சென்ற வாரம் எச்­ச­ரிக்கை விடுத்த பின் தற்­பொ­ழுது இந்த அறி­வு­ரையை வெளி­யிட்­டுள்­ளது. அந்­தப் போலி செய­லியை பதி­வி­றக்­கம் செய்­தால், அது ஒரு­

வ­ரின் கைப்­பே­சி­யில் ஊடு­ருவி அதி­லி­ருக்­கும் தக­வல்­களை மோச­டிக்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்­தக்­கூ­டும் என்று காவல்­துறை எச்­ச­ரிக்கை செய்­துள்­ளது.

இதன் தொடர்­பில் பொது­மக்­கள் சந்தே­கத்திற்­கு­ரிய எந்­தச் செய­லி­யை­யும் பதி­வி­றக்­கம் செய்ய வேண்­டாம் என்­றும் காவல்­துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

மோசடி அறி­கு­றி­கள் தெரிய வந்­தால் பொது­மக்­கள் www.scamalert.sg என்ற இணை­யத்­த­ளத்­தில் சரி­பார்த்­துக் கொள்­ள­லாம் அல்­லது 1800-772-6688 என்ற எண்­ணு­டன் தொடர்பு கொள்­ள­லாம்.