திரு ஸ்டாலினை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகச் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
நேற்று மாலை நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளியல் ஆற்றல்மீது சிங்கப்பூர் கொண்டுள்ள ஆர்வத்தையும் அங்கீகாரத்தையும் இந்த மாநாடு உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளியலாக மாறவேண்டும் என தமிழ்நாடு கொண்டுள்ள பெரும் இலக்கை ஆதரிக்க சிங்கப்பூர் ஆவலாக இருப்பதாகவும் திரு ஈஸ்வரன் கூறினார்.
வர்த்தகங்களுக்குச் சாதகமான சூழல், திறனாளர்கள் கொண்ட ஊழியரணி, ஆதரவு தரும் அரசாங்க அமைப்புகள் ஆகிய காரணங்களால் இந்தியாவுக்குள் கால்பதிக்க விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சிறந்த நுழைவாயில் என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.

