தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருடன் தமிழ்நாடு 6 ஒப்பந்தங்களில் கையெழுத்து

1 mins read
da31a8ff-2474-4b9b-aed6-2e50eb95f488
-

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக பயணங்களை மேற்கொள்ள 'கைடன்ஸ் இந்தியா' அமைப்புக்கும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபைக் கும் இடையிலான ஒப்பந்தம் வகை செய்கிறது.

சிங்கப்பூர் இந்திய பங்காளித்துவ அலுவலகத்திற்கும் தமிழகத்தின் மாநில தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடு செய்யப் பட்டுள்ளது. தொழில்துறையில் கூடுதல் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் இது.

மின்னிலக்கத் துறையைச் சார்ந்த ஓர் ஒப்பந்தத்தில், ஃபேம் டிஎன், ஸ்டார்ட் அப் டிஎன் ஆகிய தமிழக நிறுவனங்களுடன் சிங்கப்பூரின் சீப்போ நிறுவனம் இணைந்து உள்ளது. உற்பத்தித்துறையைச் சேர்ந்த சிங்கப்பூரின் 'ஹை-பி' நிறுவனம், 'என்டர் பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் 'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப் புடன் ஒப்பந்தம் ஒன்றில் இணைந்தது. செங்கல்பட்டில் உற்பத்தி நிறுவனத்தை அமைத்து S$50 மில்லியன் முதலீட்டுச் செல வில் 700 புதிய வேலைகளை உருவாக்க 'ஹை-பி' நிறுவனம் இதன் மூலம் திட்டமிடு கிறது.

'எஸ்யுடிடி' எனப்படும் சிங்கப்பூர் தொழில் நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான ஒப்பந்தம், மேல்நிலைக் கல்வி சார்ந்த திட்டங்களை மேற்கொள்ள வகைசெய்கிறது.

தொழில்சார்ந்த கல்வித்துறையில் சிங்கப்பூர் தொழிற்கல்விக் கழகமும் 'டிஎன்எஸ்டிசி' (TNSDC) எனப்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்துள்ளன.