தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வோங்: மிதமிஞ்சிய நடவடிக்கைகள் உலகப் பொருளியலை சிதைக்கும்

2 mins read
ad793ae6-df47-4a2f-9d5f-b3241613e443
-

உல­கப் பொரு­ளி­ய­லி­லி­ருந்து சீனாவை நீக்­க­வில்லை, மாறாக அதன் தொடர்­பி­லான அபா­யக்­கூ­று­களை நீக்­கு­வ­தா­கக் கூறி செயல்­ப­டு­வது உல­கப் பொரு­ளி­யலை சித­றி­டித்­து­வி­டும் என்­றும் உல­கப் பொரு­ளி­யல் துண்­டாக்­கப்­படும், துண்­டிக்­கப்­படும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

"விரி­வான பொரு­ளி­யல் தொடர்­பு­க­ளைப் பாதிக்­கா­மல் தங்­க­ளுக்கு பாத­க­மான அபா­யக்­கூ­று­களை நீக்­கு­வ­தா­கக் கூறி, ஒரு குறிப்­பிட்ட உத்­தி­பூர்வ பகு­தி­க­ளுக்கு மட்­டும் நன்மை பயப்­ப­தா­கப் பார்ப்­பது மிகக் கடி­னம்.

"அபா­யக்­கூ­று­களை நீக்கும் நடவடிக்கைகளைப் பெரிய அளவில் மேற்கொண்டால் அவை, எதிர்­பா­ராத எதிர்­விளைவு­களை உண்டு பண்­ணும். காலப்­போக்­கில் அத­னால் உல­கப் பொரு­ளி­யல் துண்­டாக்­கப்­படும், துண்­டிக்­கப்­படும்," என்று திரு வோங் எச்­ச­ரித்­தார்.

வர்த்­தக தலை­வர்­கள், கல்­வி­யா­ளர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள் ஆகி­யோர் பங்­கேற்ற 'ஆசி­யா­வின் எதிர்­கா­லம்' எனும் தலைப்­பி­லான நிக்­கே கருத்­த­ரங்­கில் பேசிய திரு வோங், கடந்த வாரம் ஜப்­பா­னின் ஹிரோ­ஷிமா நக­ரில் நடை­பெற்ற ஜி7 உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் தலை­யெ­டுத்த புதிய மொழி­யான 'டி-ரிஸ்­கிங்' பற்றி பேசி­னார்.

தலை­வர்­கள் 'டி-ரிஸ்­கிங்' அதா­வது அபா­யக்­கூ­று­களை நீக்­கு­வ­து எனும் சொல்லை தங்­கள் கூட்­ட­றிக்­கை­யில் முதன் முத­லா­கப் பயன்­படுத்­தி­னார்­கள். முன்பு இதைக் குறிக்க 'டிகப்­லிங்' அதா­வது துண்­டித்­தல் எனும் சொல்லைத் தலை­வர்­கள் பயன்­படுத்­தி­னார்­கள்.

"சீனா­வுக்கு கேடு விளை­விப்­பது அல்­லது சீனா­வின் வெற்றி­க­ர­மான பொரு­ளி­ய­லுக்­கும் மேம்­பாட்­டுக்­கும் பாத­கத்தை ஏற்­ப­டுத்­து­வது எங்­கள் கொள்­கை­யின் அணு­கு­மு­றை­யல்ல. நாங்­கள் அவற்­றைத் துண்­டிக்க விரும்­ப­வில்லை. அதே­வே­ளை­யில், பொரு­ளி­யல் மீட்­சிக்கு அபா­யக்­கூ­று­களை நீக்குவதும் பொருளியலை பல்வகைப்படுத்துவதும் அவசியம் என்­ப­தை­யும் நாங்­கள் அங்­கீ­க­ரிக்­கி­றோம்," என்­றும் ஜி7 அறிக்கை கூறு­கிறது.

அபா­யக்­கூ­று­களை நீக்­கு­வ­தற்கும் துண்­டித்­த­லுக்­கும் வேறு­பாடு உள்­ளது. அபா­யக்­கூ­று­களை நீக்குவது என்பது விநி­யோ­கச் சங்­கி­லி­யில் மற்­ற­வர்­களை அள­வுக்கு அதி­க­மாக சார்ந்­தி­ருப்­ப­தைக் குறைப்பது என்று பொருள்படும் என்­றும் ஜி7 அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சீனா இந்த அறிக்­கை­யைக் கண்­டித்­தது.

"நாடு­களும் நிறு­வ­னங்­களும் ஏன் அபா­யக்­கூ­று­களை நீக்­கு­வ­தை­யும் பல்­வ­கைப்­ப­டுத்­து­தல் அணு­கு­மு­றை­யை­யும் நாடு­கின்­றன என்று புரிந்­து­கொள்ள முடி­கிறது. மூலப் பொருள்­கள், முக்­கி­ய­மான உதிரி பாகங்­கள், தொழில்­நுட்­பம் ஆகி­ய­வற்­றுக்கு ஒரு குறிப்­பிட்ட விநி­யோ­கிப்­பா­ளரை அதி­கம் நாடி­யி­ருக்க யாரும் விரும்பமாட்­டார்­கள்," என்­றும் திரு வோங் விவ­ரித்­தார்.

"துண்டு துண்­டா­கப் பிரிந்­தி­ருக்­கும் உல­கப் பொரு­ளி­யல் உலக நாடு­க­ளைப் போட்­டிபோடும் வட்­டா­ரக் குழு­மங்­க­ளா­கப் பிரித்­து­வி­டும். இத­னால், வெற்றி­க­ர­மான நமது பொரு­ளி­ய­லுக்கு உதவி வரும் அம்சங்களான முத­லீ­டு­கள், வர்த்­த­கம், ஒருங்கிணைந்த சிறந்த யோசனைகள் போன்­ற­வற்­றைக் குறைத்­து­, பாதகமான விளைவுகளை அதிகமாக்கும்," என்­றும் துணைப் பிரதமர் வோங் தெரிவித்தார்.