தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அருகிவரும் தாவரங்களைக் குறிக்கும் அஞ்சல்தலைகள்

1 mins read
d24c78e5-da3b-4082-a9a8-af10a169c10e
-

குடி­ய­ர­சில் அரு­கி­வ­ரும் தாவர வகை­க­ளைக் குறிக்­கும் நான்கு அஞ்­சல் தலை­களை சிங்­கப்­பூர் அஞ்­சல் துறை (சிங்­போஸ்ட்) நாளை வெளி­யி­ட­வி­ருக்­கிறது.

பல்­லு­யிர் விழா 2023ஐ முன்­னிட்டு இவை வெளி­யி­டப்

படு­கின்­றன. இந்த வரு­டாந்­தி­ரக் கொண்­டாட்­டம் சிங்­கப்­பூ­ரின் இயற்கை மர­பு­டை­மையைக் கட்­டிக்­காக்­கும் சமூ­கத்­தின் முயற்­சி­களை அங்­கீ­க­ரிப்­ப­தாக அமைந்­துள்­ளது என்று சிங்­போஸ்ட் நேற்று தெரி­வித்­தது.

தேசிய பூங்­காக் கழ­க­மும் பல்­லு­யிர் வட்­ட­மேசை அமைப்­பும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள இந்த விழா சனிக்­கி­ழ­மை­யும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் ஹார்ட்­பீட்@பிடோக் வளா­கத்­தில் நடை­பெ­றும்.

அஞ்­சல்­த­லை­க­ளின் விலை 31 காசி­லி­ருந்து $1.50 வரை இருக்­கும். கடு­மை­யாக அருகி வரும் இந்த நான்கு தாவர வகை­கள் தேசிய பூங்­காக் கழ­கத்­தின் தாவர இன மீட்­புத் திட்­டத்­தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நான்கு தாவர வகை­களும் சிங்­கப்­பூ­ரின் எஞ்­சி­யுள்ள ஒரே நன்­னீர் ஈர சதுப்­பு­நிலத்­தைக் கொண்ட நீ சூன் ஈர­ சதுப்புநி­லக் காட்­டில் கண்­டு ­பி­டிக்­கப்­பட்­டன.

அஞ்­சல்­த­லை­க­ளு­டன் கூடிய முதல்­நாள் அட்­டை­கள் $5.05க்கும் அன்­ப­ளிப்பு தொகுப்­பு­கள் $6.15க்கும் எல்லா அஞ்­சல் நிலை­யங்­கள், அஞ்­சல் தலை விற்­கும் கடை­கள், shop.singpost.com எனும் இணை­யக் கடை ஆகி­ய­வற்­றில் சனிக்­கிழமை முதல் இருப்பு இருக்­கும் வரை கிடைக்­கும்.