3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆடவர் பலி

3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆடவர் பலி

1 mins read
2b21123a-c4d0-40b8-be95-3e4520a33250
-

விக்டோரியா ஸ்திரீட்டுக்கும் பிராஸ் பாசா ரோட்டிற்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நேற்றுக் காலை நடந்த விபத்தில் 26 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

'சைம்ஸ்' வளாகத்திற்கு அருகே அவரது மோட்டார் சைக்கிள், லாரி ஒன்றுடனும் பேருந்துடனும் மோதியது.

ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் பேருந்துச் சேவை 851ன் முன்பகுதி மோட்டார் சைக்கிள் ஒன்றை உரசிச் சென்றதாகக் கூறியது. மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தது குறித்து வருத்தம் அடைவதாகக் கூறிய நிறுவனம், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.

சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த யாரும் காயமடையவில்லை.

விபத்தைத் தொடர்ந்து ஹில் ஸ்திரீட் பகுதி வரை வாகன நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

விபத்து குறித்து நேற்றுக் காலை 7.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது. 31 வயது லாரி ஓட்டுநர் விசாரணையில் உதவிவருவதாக அது குறிப்பிட்டது.

விபத்தில் லேசாகக் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.