புற்றுநோயாளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சேவை

புற்றுநோயாளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சேவை

2 mins read
65dd9601-c059-461d-993e-3f8da695d7a7
-

அனுஷா செல்­வ­மணி

பொது­வாக புற்­று­நோ­யா­ளி­கள் சிகிச்சை மேற்­கொண்ட பிறகு அவர்­க­ளின் எலும்­பு­கள் பல­வீ­ன­மா­கும் நிலை­யில் அவர்­க­ளுக்கு 'ஸொலேட்­ரோ­னிக் ஆசிட்' எனப்­படும் மருந்து அளிக்­கப்­ப­டு­கிறது. இந்த மருந்து, புற்­று­நோ­யா­ளி­க­ளுக்கு நோய் பர­வ­லைத் தவிர்க்­க­வும் எலும்­பு­களை வலுப்­ப­டுத்­த­வும் உத­வும்.

இதற்கு முன்­னர் நோயா­ளி­கள் சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கப் புற்­று­நோய் கழ­கத்­துக்­குச் சென்­று­தான் இந்த மருந்­தைத் தங்­க­ளின் நரம்பு வழி­யாக ரத்­தத்­தி­னுள் செலுத்த வேண்­டி­யி­ருந்­தது. கழ­கத்­தி­லி­ருந்து தொலை­வில் வசிக்­கும் நோயா­ளி­க­ளுக்கு இனி அந்­தக் கவலை வேண்­டாம்.

புற்­று­நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­க­ரித்­துக்­கொண்டிருக்கும் நிலை­யில், மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் நோயா­ளி­க­ளின் புற்­று­நோய் தீவி­ரத்தை அறிந்து அவர்­க­ளுக்கு உரிய சிகிச்­சையை அளிக்க முற்­பட்டு வரு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் இரண்டு முன்­னணி புற்­று­நோய் சிகிச்சை நிலை­யங்­களில் சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கப் புற்­று­நோய் கழ­க­மும் ஒன்று.

2017ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கப் புற்­று­நோய் கழ­கம், 'என்­சி­ஐ­எஸ் ஒன் தி கோ' எனும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. தற்­போது மேற்கு வட்­டா­ரத்­தில் இருக்­கும் மூன்று மருந்­த­கங்­களில் இத்­திட்­டம் செயல்படுத்தப்பட்டு வரு­கிறது.

இதன் பய­னாக நோயா­ளி­கள் சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கப் புற்­று­நோய் கழ­கத்­துக்கு அப்­பாற்­பட்டு, நேரத்­தை­யும், செல­வை­யும் மிச்­சப்­ப­டுத்­தும் விதத்­தில் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்­கும் மருந்­த­கத்­தி­லேயே சிகிச்­சை பெற்­றுக்­கொள்­ள­லாம்.

திட்­டத்­தின்கீழ் செயல்­படும் ஜூரோங் மருத்­துவ நிலை­யத்­தில் தொடங்கி, இனி நோயா­ளி­கள் கியட் ஹொங் ஒருங்­கி­ணைந்த தனி­யார் பொது மருந்­த­கத்­திலும் கிள­மெண்­டி­யில் உள்ள ஃபிரண்­டி­யர் ஒருங்­கி­ணைந்த தனி­யார் பொது மருந்­த­கத்­தி­லும் இனி இந்த சேவையைப் பெறலாம்.

19 புற்­று­நோய் சிகிச்­சை­கள், மூன்று மருத்­துவ நடை­மு­றை­கள், 49 ரத்­தப் பரி­சோ­த­னை­கள் ஆகி­யவை இந்­தத் திட்­டம் மூலம் புற்று­நோ­யா­ளி­க­ளுக்கு மருந்­த­கங்­களில் வழங்­கப்­பட்டு வரு­கிறது.

சேவை மூலம் பயன் கண்ட நோயா­ளி­களில் ஒரு­வ­ரான 57 வயது இஃபத் அரா நூர்­ஜ­ஹான், நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு இரண்­டாம் கட்ட மார்­ப­கப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டார்.

மீண்­டும் புற்­று­நோய் அவ­ரைத் தாக்­கா­மல் இருக்க இவர் சிகிச்­சைப் பெற்று வரு­கி­றார். தனது எலும்­பு­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு இஃபத், 'ஸொலேட்­ரோ­னிக் ஆசிட்' மருந்தை முன்பு சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கப் புற்று­நோய் கழ­கத்­துக்­குச் சென்று எடுக்க வேண்­டி­ய­தாக இருந்­தது.

கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக பணி­பு­ரி­யும் இவர், "நான் உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தில் வசிக்­கி­றேன். இதற்கு முன்பு சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கப் புற்­று­நோய் கழ­கத்­துக்­குச் செல்ல நான் ஒரு மணி நேர­மா­வது பய­ணம் செய்ய வேண்­டும். இப்­பொ­ழுது ஜூரோங் மருத்­துவ நிலை­யத்­திற்கு வரு­கி­றேன். இங்கு நான் காத்­தி­ருக்­க­த் தேவை­யில்லை. இந்­தச் சேவை இதர இரண்டு மருந்­த­கங்­க­ளுக்கு விரி­வாக்­கம் செய்­யப்­ப­டு­வ­தால் எனக்கு வச­தி­யாக உள்­ளது." என்­றார்.