மூன்று உணவுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவு

கிளார்க் கீ பகு­தி­யில் இருக்­கும் செண்ட்­ரல் மால் கடைத்­தொ­கு­யில் உள்ள மூன்று உண­வுக்­கடை­களை இரண்டு வாரங்­களுக்­குத் தற்­கா­லி­க­மாக மூட சிங்­கப்­பூர் உணவு அமைப்பு உத்­த­ர­விட்­டுள்­ளது. சுத்­த­மில்­லா­மல் இருந்த கார­ணங்­க­ளுக்­காக அந்­தக் கடை உரி­மை­யா­ளர்­கள் தண்­டிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

செண்­ட்­ரல் மால் காபி ஹவூஸ், ஆய்ஸ்­டர் கோ, சூ‌ஷி உண­வுக்­க­டை­க­ளின் உரி­மம் ஜூன் 7ஆம் தேதி வரை தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தாக சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­தது.

உண­வுக் கடை­கள் கடந்த 12 மாதங்­களில் மட்­டும் 12 குற்­றப் புள்­ளி­க­ளைப் பெற்­றி­ருந்­த­தாக உணவு அமைப்­பின் அறிக்கை குறிப்­பிட்­டி­ருந்­தது. மேலும் உண­வுக் கடை­க­ளுக்கு மொத்­த­மாக 800 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

கூடு­த­லாக அக்­க­டை­களில் உண­வைக் கையா­ளு­ப­வர்­கள் ஊழி­ய­ரணி திறன் தகு­தி­யில் உள்ள உண­வுப் பாது­காப்பு பாடத்­தின் முதல் நிலையை மீண்­டும் கற்­க­வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அதை செய்­யா­மல் அவர்­கள் வேலைக்கு திரும்­பக்­கூ­டாது.

பொதுச் சுகா­தார சட்­டத்தை மீறு­ப­வர்­கள் மீது எவ்வித தயக்­கமு­ம் இன்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் உண­வுக் கடை­களும் அதன் ஊழி­யர்­களும் உணவு, சுத்­தம் தொடர்­பான விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் உண­வைக் கையா­ளு­ப­வர்­கள் தகுந்த உரி­மம் வைத்­தி­ருக்க வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­தது.

உண­வுக் கடை­களில் தூய்­மைக் குறை­பாடு இருப்பதைக் கண்­டால் https://www.sfa.gov.sg/feedback என்ற இணை­யப்­பக்­கம் மூலமோ 6805-2871 என்ற தொலை­பேசி எண்­ணுக்கு அழைத்து சிங்­கப்­பூர் உணவு அமைப்­பி­டம் பொது­மக்­கள் தக­வல் கொடுக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!