'ஏஷியா சென்டினெல்' இணையப் பதிப்பகம் தவறான செய்தியை வெளியிட்டதாக அதற்கு 'பொஃப்மா' சட்டத்தின்கீழ் திருத்தம் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்ற புதன்கிழமை 'சிங்கப்பூர் குரங்குகளை அச்சுறுத்த கோழியைக் கொல்கிறது' எனும் தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பில் உள்துறை அமைச்சு அவ்வாறு உத்தரவிட்டது.
பணி நீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர் ரவி, திரு லீ சியன் யாங், திருமதி லீ சுவெட் ஃபெர்ன் போன்றோர் தொடர்பான கட்டுரை அது. ஜான் பெர்த்தெல்சன் அதனை எழுதியுள்ளார்.
இணையத்தில் வேண்டுமென்றே பொய்யான தகவலை வெளியிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொஃப்மா' சட்டம் வழிவகுக்கிறது.