உலக விழாவில் விருதுகளைக் குவித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக விழாவில் விருதுகளைக் குவித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

1 mins read
3dd298a9-39c0-4a72-b474-b94736600c13
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் காணொளி ஆசிரியர் இ-வோன் இயுங் (இடது), 'எஸ்டி நவ்' ஆசிரியர் லீ யூலின் (நடுவில்), வாசகர் வளர்ச்சி ஆசிரியர் இங் கய் லிங். படம்: இன்மா -

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹார்வர்ட் கிளப்பில் வருடாந்திர அனைத்துலக செய்தி ஊடகச் சங்க (இன்மா) உலக விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

மொத்தம் 20 பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பல விருதுகளை வென்றது.

2022 காற்பந்து உலகக் கிண்ணப் போட்டிக்கான சிறப்பு கலந்துறவாடலுக்கு வழங்கப்பட்ட ஆசிய பசிபிக் விருது அவற்றில் அடங்கும்.

உலகில் தலைசிறந்த பெருமையை நார்வேயின் பெர்ஜன்ஸ் டிடென்ட் என்ற நாளிதழ் பெற்றது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 'ஸ்டாப் ஸ்கேம்ஸ்' (மோசடிகள் தடுப்பு) என்ற இயக்கம் பொது உறவு அல்லது சமூகச் சேவை இயக்கம் பிரிவில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டது.

2022 உலகக் கிண்ணப் போட்டி செய்திகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட பாணி வாசகர்களை ஈடுபடுத்தும் வகையில் அமைந்தது.

தலைசிறந்த யோசனைகளுக்கான தேசிய பாணி பிரிவில் அமெரிக்காவின் 'யுஎஸ்ஏ டுடே'வை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதல் பரிசை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தட்டிச் சென்றது.

இதில் 'கேரியர் டெல்லா செரா' என்ற இத்தாலிய நாளிதழுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.