காவல்துறை அதிகாரிகள் இம்மாதம் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை பொழுதுபோக்கு நிலையங்களிலும் இரவுநேர கேளிக்கை விடுதிகளிலும் தொடர்ச்சியாக எடுத்த பல நடவடிக்கைகளில் 24 பேர் கைதாயினர்.
போதைப்பொருள் பயன்படுத்தியது, சட்டவிரோத கும்பல்களின் உறுப்பினராக இருந்தது போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் கைதானோர் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் 17 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
66 பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
227 பேரை விசாரிக்கவும் செய்தனர்.

