காவல்துறை அதிகாரிகள் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களிலும் இரவுநேர கேளிக்கை விடுதிகளிலும் தொடர்ச்சியாக எடுத்த பல நடவடிக்கைகளில் 24 பேர் கைதாயினர்.
போதைப்பொருள் பயன்படுத்தியது, சட்டவிரோத கும்பல்களின் உறுப்பினராக இருந்தது போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தச் சந்தேக நபர்கள் 17 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள்.
அவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதிகாரிகள் 66 பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களில் சோதனையிட்டனர். 227 பேரையும் விசாரித்தனர்.