உலக விழாவில் விருதுகளைக் குவித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக விழாவில் விருதுகளைக் குவித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

1 mins read
ab3c2688-a8f6-4e1f-a929-d70f85c32c7f
-

அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் உள்ள ஹார்­வர்ட் கிளப்­பில் வரு­டாந்­திர அனைத்­து­லக செய்தி ஊட­கச் சங்க (இன்மா) உலக விருது வழங்­கும் விழா வெள்­ளிக்­கி­ழமை நடந்­தது. மொத்­தம் 20 பிரி­வு­களில் வெற்றி பெற்­ற­வர்­கள் அறி­விக்­கப்­பட்டு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

அதில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பல விரு­து­களை வென்­றது. உல­கக் கோப்பை 2022 சிறப்பு கலந்­து­ற­வா­ட­லுக்­கான ஆசிய பசி­பிக் விருது அவற்­றில் அடங்­கும். உல­கில் தலை­சி­றந்த பெருமையை நார்­வே­யின் பெர்­ஜன்ஸ் டிடென்ட் என்ற நாளி­தழ் பெற்­றது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் 'ஸ்டாப் ஸ்கேம்ஸ்' (மோச­டி­கள் தடுப்பு) என்ற இயக்­கம் பொது உறவு அல்­லது சமூ­கச் சேவை இயக்­கம் பிரி­வில் சிறப்­பா­கக் குறிப்­பி­டப்­பட்­டது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் உலகக் கோப்பை 2022 செய்­தி­களை வெளி­யிட்ட பாணி வாச­கர்­களை ஈடு­ப­டுத்­தும் வகை­யில் அமைந்­தது.

தலை­சி­றந்த யோச­னை­களுக்­கான தேசிய பாணி பிரி­வில் அமெ­ரிக்­கா­வின் 'யுஎஸ்ஏ டுடேவை' இரண்­டாம் இடத்­திற்­குத் தள்ளி முதல் பரிசை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் வென்­றது. இதில் 'கேரி­யர் டெல்லா செரா' என்ற இத்­தா­லிய நாளி­த­ழுக்கு மூன்­றாம் பரிசு கிடைத்­தது.