பாலர் பள்ளியில் 32 பேருக்கு வயிற்றுக்கோளாறு

பாலர் பள்ளியில் 32 பேருக்கு வயிற்றுக்கோளாறு

1 mins read
816d9773-43fa-4e0a-9eca-9c1a914adaa6
-

சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 3ல் செயல்­படும் 'மைண்ட்­சேம்ப்ஸ்' பாலர்­பள்­ளி­யில் 28 மாண­வர்­களும் நான்கு ஊழி­யர்­களும் வயிற்­றுப்­போக்­கால் பாதிக்­கப்­பட்­டதை அடுத்து அது பற்றி அதி­கா­ரி­கள் புலன்­விசா ரணை நடத்தி வரு­கி­றார்­கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மே மாதம் 17ஆம் தேதிக்­கும் கடந்த திங்­கள்­கி­ழ­மைக்­கும் இடை­யில் வயிற்­றுப்­போக்கு அறி­கு­றி­கள் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

யாரும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்று சிங்­கப்­பூர் உணவு முகவை, சுகா­தார அமைச்சு, பாலர் பருவ மேம்­பாட்டு முகவை ஆகி­யவை அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

உணவு பாது­காப்பு என்­பது கூட்டுப் பொறுப்பு. சிங்­கப்­பூர் உணவு முகவை விதி­மு­றை­களை அமல்­ப­டுத்தி வரு­கின்ற அதே நேரத்­தில், உணவு தயா­ரிப்­பா­ளர்­களும் விநி­யோ­கிப்­பா­ளர்­களும் துப்­பு­ர­வான நடை­மு­றை­களை, பழக்­க­வ­ழக்­கங்­க­ளைப் பின்­பற்றி அதன்­மூ­லம் தங்­கள் பங்கை ஆற்ற வேண்டும் என்பதை அந்த அமைப்­பு­கள் சுட்­டிக்­காட்­டின.