அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட டான் செங் போக் தயார்

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட டான் செங் போக் தயார்

1 mins read
5630f71f-765c-458d-b49e-4c2168f43340
-

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சியை (பிஎஸ்பி) நிறு­வி­ய­வ­ரும் அதன் அவைத் தலை­வ­ரு­மான டாக்­டர் டான் செங் போக் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.

அடுத்த பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­டத் தான் தயார் என்று அப்­போது அவர் கூறி­னார்.

''ஏற்­பு­டைய நிலை­யில் இருக்­கும்வரை நான் களத்­தில் இருப்­பேன். போட்­டி­யில் இருந்து ஒரு­போ­தும் பின்­வாங்கி ஓட­மாட்­டேன். இதைத்­தான் எப்­போ­தும் நான் சொல்லி வரு­கி­றேன்.

''2025ல் நடக்­கும் தேர்­தல் மிகச் சவா­லா­ன­தாக இருக்­கும். இது­வ­ரை­ அந்­தத் தேர்­த­லுக்கு மிக­வும் தயா­ராக நான் இருக்­கிறேன்,'' என்று 83 வயது டாக்­டர் டான் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் அடுத்த பொதுத் தேர்­தல் 2025 நவம்­பர் மாதத்­திற்­குள் நடக்க வேண்­டும். டாக்­டர் டான் 2021ல் அந்­தக் கட்­சி­யின் தலை­வர் பொறுப்­பில் இருந்து வில­கிக்கொண்­டார்.

அது முதல் அவர் பொது இடங்­களில் அவ்­வ­ள­வா­கத் தென்­பட்­ட­தில்லை. டாக்­டர் டான் 2020ல் வெஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­கு­தி­யில் போட்­டி­யிட்­டார். மக்­கள் செயல் கட்சி குழு­வி­டம் தோல்­வி­ய­டைந்­தார்.

பிஎஸ்பியின் அடுத்த தேர்­தலுக்­கான இலக்­கு­கள் நேற்­றைய கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டன.

கட்­சி­யின் புதிய மத்­திய செயற்­குழு மார்ச் மாதம் அமைந்­தது. இப்­போது தொகு­தி­யில்லா நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கும் லியோங் மன் வாய், 64, கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டார்.

எதிர்க்­கட்­சி­க­ளைத் திரட்டி கூட்­டணி ஒன்றை அமைக்க தன் கட்சி முனைப்புடன் வச­தி­ செய்து தரும் என்று நேற்று திரு லியோங் கூறி­னார்.