நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கமாய் இருக்க வேண்டும்

நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கமாய் இருக்க வேண்டும்

2 mins read
647f0612-db9a-4d20-b0b5-7ef13f686b08
-

குடும்­பப் பின்­னணி எது­வானாலும் ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் ராஃபிள்ஸ் கல்வி நிலை­யம் வாய்ப்­பும் நம்­பிக்­கை­யும் தரும் ஒரு கலங்­கரை விளக்­க­மாக தொடர்ந்து இருக்க வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார். நேற்று நடை­பெற்ற பள்­ளி­யின் இருநூற்றாண்டு நிறைவு நிகழ்­வில் திரு லீ சார்­பாக உரை நிகழ்த்­திய கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் இவ்­வாறு கூறி­னார்.

"சிங்­கப்­பூர் சிறந்த பள்­ளி­களைக் கொண்­டுள்ள நிலை­யில் ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் மாண­வ­ராக சேர்­வ­தும் சிறந்த கல்­விக்கு இட்­டுச் செல்­லும் பாதை­களில் ஒன்று," என்று தமது உரை­யில் திரு லீ குறிப்­பிட்­டி­ருந்­தார். பள்­ளிக் கட்­ட­ணத்­தைச் செலுத்த முடி­யாத கார­ணத்­தாலோ மற்­ற­வர்­க­ளு­டன் நட்­பு­கொள்ள முடி­யாத கார­ணத்­தாலோ திற­மை­வாய்ந்த மாண­வர்­கள் எவ­ரும் ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் சேரும் வாய்ப்பை இழந்து­வி­டக்­கூ­டாது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சில நாள்­க­ளுக்கு முன் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பிர­த­மர் லீ பாதிக்­கப்­பட்­டதை அடுத்து, நேற்­றைய நிகழ்­வில் அவர் கலந்­து­கொள்­ள­வில்லை. இருப்­பி­னும், தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் வாழ்த்து தெரி­விக்­கும் பதிவு ஒன்றை நேற்று அவர் வெளி­யிட்­டி­ருந்­தார்.

சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நடை­பெற்ற நிகழ்­வில் ஏறத்­தாழ 5,000 பேரு­டன் ராஃபிள்ஸ் கல்வி­நி­லை­யத்­தின் முன்­னாள் மாண­வர்­க­ளான துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ மற்­றும் முன்­னாள் பிர­த­மர் கோ சோக் டோங் ஆகி­யோ­ரும் கலந்து­கொண்­ட­னர்.

பல்வேறு குடும்­பப் பின்­னணி­க­ளைச் சேர்ந்த தலை­சி­றந்த மாண­வர்­களை ஈர்க்­கும் வகை­யில் பள்ளி செயல்­பட வேண்­டும் என்­றும் அந்த மாண­வர்­கள் சிறந்து விளங்­கும் வாய்ப்­பை­யும் சேவை­யாற்­றும் ஊக்­கத்­தை­யும் பெற வேண்­டும் என்­றும் பிர­த­மர் லீ தமது உரை­யில் சுட்­டி­னார்.

இது­வரை வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 3,700க்கும் மேற்­பட்ட மாண­வர்­களுக்கு 'ராஃபிள்ஸ் உப­கா­ரச் சம்­ப­ளம்' வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் அதன் நேர­டிப் பள்ளி நுழை­வுச் சேர்க்­கைத் திட்­டத்தை ராஃபிள்ஸ் கல்வி நிலை­யம் விரி­வு­ப­டுத்­தி­யதை அடுத்து கல்­வி­சார்ந்த மதிப்­பெண்­களில் மட்­டு­மல்­லாது விளை­யாட்­டு­கள், கலை­கள், தலை­மைத்­து­வம் போன்ற அம்­சங்­க­ளி­லும் சிறந்து விளங்­கும் மாண­வர்­க­ளைப் பள்ளி அங்­கீ­க­ரித்துள்ளது.

உன்­னத நிலையை அடை­வதற்­குத் தனிப்­பட்ட சாத­னை­கள் மட்­டும் போதாது என்று குறிப்­பிட்ட பிர­த­மர் லீ, சமு­தா­யத்­திற்­கும் மாண­வர்­கள் பங்­க­ளிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தினார்.