பிரதமர் லீ சியன் லூங் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது கடந்த 22ஆம் தேதியன்று உறுதியானதை அடுத்து நேற்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தாம் கிருமித்தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் மீண்டும் பணிக்குத் திரும்புவதாக 71 வயது திரு லீ குறிப்பிட்டிருந்தார்.
தென்னாப்பிரிக்கா, கென்யா, இந்தோனீசியா நாடுகள் உள்பட பணி நிமித்தமாக திரு லீ பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதை அடுத்து அவருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
வயது காரணத்தால் அவரின் மருத்துவர்கள் 'பாக்ஸ்லோவிட்' மருந்தை அவருக்குப் பரிந்துரைத்தனர் என்று திரு லீ குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சிங்கப்பூரர்கள் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக்கொண்டு வருமாறு பிரதமர் லீ அறிவுறுத்தியுள்ளார்.