செங்காங் விபத்து: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகம்

செங்காங் விபத்து: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகம்

1 mins read
8ef32c9d-2111-478e-af40-0868c230e537
-

செங்­காங் வட்­டா­ரத்­தில் நேற்­றுக் காலை இரண்டு கார்­கள் மோதிக்­கொண்­ட­தில் சாலை விளக்கு, போக்­கு­வ­ரத்து விளக்கு, சாலைத் தக­வல் பலகை ஆகி­யவை சேத­ம­டைந்­தன. இதற்­கி­டையே மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டி­ய­தாக 46 வயது ஓட்­டு­நர் ஒரு­வர் சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இரு வாக­னங்­க­ளின் ஒன்­றில் முன் பயணி இருக்­கை­யில் 34 வயது பெண் ஒரு­வர் மாட்­டிக்­கொண்ட நிலை­யில், அவரை விடு­விப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் மீட்­புக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது.

அவர் சுய­நி­னை­வு­டன் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

ஃபெர்ன்­வேல் ஸ்தி­ரிட், ஃபேர்ன்­வேல் லிங்க் இடையே உள்ள சாலைச் சந்­திப்­பில் விபத்து பின்­னி­ரவு 2 மணி­ய­ள­வில் நிகழ்ந்­த­தா­கக் காவல்­துறை­யி­னர் தெரி­வித்­த­னர்.

வெள்ளை நிற கார் ஒன்­றும் கறுப்பு நிற கார் ஒன்­றும் மோதி­யதை அடுத்து மூன்று தீய­ணைப்பு வாக­னங்­களும் ஒரு மருத்­துவ வண்­டி­யும் விபத்து நடந்த இடத்­தில் நிறுத்­தப்­பட்டு இருப்­ப­தைக் காட்­டும் காணொளி, சமூக ஊட­கங்­களில் பரவலாகப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.