அண்டையில் சிகிச்சை நாட வசதியாக புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம்

அண்டையில் சிகிச்சை நாட வசதியாக புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம்

2 mins read
6d086f37-0f84-4f16-a4de-60f3b9125fe3
-

மோன­லிசா

நாள்­பட்ட சிறு­நீ­ரக நோயால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் நலன்­க­ருதி முதல்­மு­றை­யாக வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் சமூக இடப்­ப­ரப்­பில் தனி­யார் சிறு­நீ­ரக ரத்த சுத்தி­க­ரிப்பு நிலை­யம் ஒன்று திறக்­கப்­பட்­டுள்­ளது.

'டையா­வி­ரும்' எனும் தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னத்­தின் இந்த ரத்த சுத்­தி­க­ரிப்பு நிலை­யம், ஃபாஜார் சாலை­யில் புளோக் 452 கீழுள்ள வெற்­றுத் தளத்­தில் அமைந்­துள்­ளது.

"சிறு­நீ­ர­கச் செய­லி­ழப்­பி­னால் பாதிப்­ப­டைந்­த­வர்­கள் தங்­கள் வாழ்­நாள் முழு­வ­தும் வாரத்­தில் மூன்று முறை மேற்­கொள்ள வேண்­டிய ரத்த சுத்­தி­க­ரிப்பு சிகிச்­சையை இந்த நிலை­யத்­தில் பெற­லாம். ஒவ்­வொரு முறை­யும் சிகிச்சை ஏறத்­தாழ நான்கு மணி நேரம் நீடிக்­கும் என்­ப­தால் வீவக புளோக்கின் கீழ் இந்த நிலை­யம் அமைந்­துள்­ளது நோயா­ளி­களுக்கு வச­தி­யாக இருக்­கும்," என்று கூறி­னார் சிகிச்சை நிலை­யத்­தில் தாதி­யா­கப் பணி­பு­ரி­யும் ரேணுகா பால­சுப்­ர­ம­ணி­யம், 34.

தம்முடைய ஒரு சிறு­நீ­ர­கம் செய­லி­ழந்­த­தன் கார­ண­மாக கடந்த ஓராண்­டுக்­கும் மேலாக டையா­வி­ரும் நிறு­வ­னத்­தில் ரத்த சுத்­தி­க­ரிப்பு மேற்­கொண்டு வரும் முக­மது ஜாஃபர், 70, "வீவக புளோக்­கின் கீழ் இது­போன்ற சுகா­தாரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் அதி­கம் உரு­வாக்­கப்­பட்­டால் என்­னைப் போன்ற முதிய நோயா­ளி­க­ளுக்­குப் பெரும் உத­வி­யாக இருக்­கும்," என்று கூறி­னார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற நிலை­யத்­தின் திறப்பு விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட புக்­கிட் பாஞ்­சாங் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா, "சிங்­கப்­பூ­ரின் ஆரோக்­கி­ய­மான சமூக மேம்­பாட்­டைப் பொது­மக்­கள் எளி­மை­யாக அணுக வச­தி­யாக உள்ள இது­போன்ற சுகா­தாரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களின் பங்கு மகத்­தா­னது," என்­றார்.

ஒரே சம­யத்­தில் 13 நோயா­ளி­கள்­வரை நிலை­யத்­தில் சிகிச்சை பெற­லாம். நிலை­யம் திங்­கள் முதல் சனிக்­கி­ழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்­படும்.