விடுமுறைப் பயணத்தில் கடப்பிதழ், கைப்பேசி தொலைந்து போனால்...

விடுமுறைப் பயணத்தில் கடப்பிதழ், கைப்பேசி தொலைந்து போனால்...

1 mins read
0a2d3e14-cfbf-4706-86cc-80f3099d17db
-

வெளி­நாட்­டுக்­குக் கொண்டு செல்­லக்­கூ­டிய மிக இன்­றி­ய­மை­யாத பொருள்­கள் நமது கைப்­பே­சி­யும் கடப்­பி­த­ழும்­தான். ஆனால் இவை பறி­போ­னால் தனி­ந­பர் தர­வு­கள் அம்­ப­ல­மா­கக்­கூ­டும் அல்­லது மின்­னி­லக்­கப் பணப்­பை­களில் உள்ள பணம் திரு­டப்­ப­ட­லாம்.

கடப்­பி­தழ்­கள் தொலைந்­து­போ­னது தொடர்­பில் கடந்த ஆண்­டில் மட்­டும் 961 புகார்­கள் கிடைத்­த­தாக குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் (ஐசிஏ) தெரி­வித்­துள்­ளது.

அத­னால் வெளி­நாடு செல்­லும் திட்­ட­மி­ருந்­தால் இந்­தத் தக­வல்­க­ளைச் சற்று அறிந்து வைத்­துக்­கொள்­ளுங்­கள்.

கடப்­பி­தழை நீங்­கள் தொலைத்­து­விட்­டால் உடனே அரு­கி­லுள்ள காவல் நிலை­யத்­தில் புகார் அளி­யுங்­கள். 'பாஸ்­போர்ட்' அள­வி­லான இரு புகைப்­ப­டங்­க­ளைத் தயா­ராக வைத்­துக்­கொள்­ளுங்­கள். தற்­கா­லி­கப் பயண ஆவ­ணத்­திற்கு அவை தேவைப்­படும்.

இத்­து­டன் 'ஐசிஏ' இணை­யத்­த­ளத்­தின்­வழி கடப்­பி­தழ் தொலைந்­தது குறித்­துப் புகார் அளிக்க வேண்­டும்.

கைப்­பே­சிக்கு முத­லில் வலு­வான ஒரு மறைச்­சொல்­லைத் தேர்ந்­தெ­டுங்­கள். முக அடை­யா­ளம் கொண்டு கைப்­பே­சி­யைச் செயல்­ப­டுத்­தும் அம்­சத்­தை­யும் பயன்­ப­டுத்­துங்­கள்.

கைப்­பேசி இருக்­கும் இடத்தை அறிந்­திட 'Find My Device', 'Find My app' போன்ற செய­லி­க­ளைப் பதி­வி­றக்­கம் செய்­வ­து­டன் உங்­க­ளு­டன் பய­ணிக்­கும் இன்­னொ­ரு­வ­ரின் கைப்­பே­சி­யு­டன் இணைப்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளுங்­கள்.