ஜூலை முதல் தேதியிலிருந்து $125 முதல் $200 வரை அதிகரிப்பு தேசிய சேவையாளர்களின் படித்தொகை உயர்கிறது

தேசிய சேவை­யா­ளர்­கள் அனை­வ­ரின் மாதாந்­தி­ரப் படித்­தொகை $125 முதல் $200 வரை உயர்த்­தப்­ப­டு­கிறது. அவ­ர­வர்­க­ளின் பத­வி­யை­யும் பிரி­வை­யும் பொறுத்து தொகை­யின் அளவு இருக்­கும்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, சிங்­கப்­பூர் காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த தேசிய சேவை­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய உயர்வு நடப்­புக்கு வரும் என்று தற்­காப்பு அமைச்­சும் உள்­துறை அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்தன.

புதிய மாற்­றத்­தின்­படி, தேசிய சேவை­யா­ளர்­க­ளின் படித்தொகை 10.9 விழுக்­காடு முதல் 21.7 விழுக்­காடு வரை உயர்­கிறது.

புதி­தா­கச் சேரும் முழு­நேர தேசிய சேவை­யா­ள­ருக்­கான படித்­தொகை $755ஆக உய­ரும். இது தற்­போது $630 ஆக உள்ளது.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யைச் சேர்ந்த கடற்­படை முக்­கு­ளிப்­பா­ளர் அல்­லது சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் திறன் உத்தி செயற்கு­ழு­வைச் சேர்ந்த படை­வீ­ரர் அல்லது சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த தீய­ணைப்பு வீரர் ஆக இருக்­கும் முழு­நேர தேசிய சேவை­யா­ள­ருக்கு $1,050 ஆக உள்ள தற்­போ­தைய படித் தொகை ஜூலை 1 முதல் $1,250 ஆக உய­ரும்.

முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­கள் தாங்­கள் சேவை­யாற்­றும் பத­வி­யில் ஒவ்­வொரு 12 மாதங்­களுக்­கும் 5 விழுக்­காட்டு அதி­க­ரிப்­பைக் காண்­பார்­கள். போர்க்­கா­லப் படை­வீ­ரர்­கள் முந்­தைய வேலை ஆண்­டில் தேசிய சேவை நட­வ­டிக்கை ஒன்­றைத் திருப்தி­க­ர­மாக நிறை­வேற்­றி­னால், 5லிருந்து 10 விழுக்­காடு வரை­யி­லான அதி­க­ரிப்­பைப் பெற­லாம் என்று அமைச்­சு­கள் குறிப்­பிட்­டன.

மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட படித்­தொ­கை­யில், $75 குறைந்­த­பட்ச வேலைப்­பி­ரிவு படித்­தொ­கை­யும் அடங்­கும்.

போர்ப்­படை போன்ற குறிப்­பிட்ட பிரி­வு­க­ளைச் சேர்ந்­த­வர்­களுக்­குக் கொடுக்­கப்­படும் கூடு­தல் படித்­தொகை இதில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டாது.

கடந்த 10 ஆண்­டு­களில், தேசிய சேவை படித்­தொ­கை­யில் மூன்று முறை மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இதற்கு முன்­னர் கடை­சி­யாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் அனைத்து முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­களும் $70 முதல் $120 வரை­யி­லான படித்­தொகை அதி­க­ரிப்­பைப் பெற்­ற­னர்.

முழு­நே­ர தேசிய சேவை­யா­ளர்­க­ளின் தனிப்­பட்ட அடிப்­படை பரா­ம­ரிப்­புக்கு உத­வும் இந்த தேசிய சேவை படித்­தொகை தொடர்ந்து போது­மா­ன­தாக அமைந்­தி­ருக்க அவ்­வப்­போது மறு­ஆய்வு செய்­யப்­பட்டு மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சு­கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!