ஜூன் முதல் அக்டோபர் வரை கடும் வெப்பம்

ஜூன் முதல் அக்டோபர் வரை கடும் வெப்பம்

2 mins read
d82a9130-443d-4be8-b449-7ebd5b854cba
-

சிங்­கப்­பூர் உள்­பட ஆசி­யா­னின் தெற்கு வட்­டா­ரத்­தில் ஜூன் முதல் அக்­டோ­பர் வரை நீண்ட காலம் நீடிக்­கும் கடு­மை­யான வெப்­பத்­தை­யும் வறண்ட வானி­லை­யை­யும் எதிர்­பார்க்­க­லாம் என்று ஆசி­யான் சிறப்பு வானிலை நிலை­யம் (ஏஎஸ்­எம்சி) கூறி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரு­டன் மலே­சியா, இந்­தோ­னீ­சியா, புரூணை, தெற்கு தாய்­லாந்து ஆகி­யவை தெற்கு ஆசி­யான் வட்­டா­ரப் பகுதியில் உள்ள நாடுகள்.

எல்­லை­தாண்­டிய புகை­மூட்­ட­மும் தீச்­சம்­ப­வங்­களும் ஏற்­ப­டு­வ­தற்­கான அபா­யம் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றும் அது தெரிவித்தது.

வர­வி­ருக்­கும் மாதங்­களில் 'எல் நினோ' பருவநிலை உரு­வாக அதிக வாய்ப்­புள்ள நிலை­யில், வறண்ட வானிலை அண்­மைய ஆண்­டு­களு­டன் ஒப்­பி­டும்­போது மிக­வும் கடு­மை­யா­ன­தா­க­வும் நீடித்­த­தா­க­வும் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அந்த நிலை­யம் கூறி­யது.

இது அக்­டோ­பர் மாதம் வரை நீடிக்­கும் என்று சிங்­கப்­பூரை தள­மா­கக்­கொண்ட ஆசி­யான் சிறப்பு வானிலை நிலை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

புகை­மூட்­டத்­தை­யும் காட்­டுத் தீ போன்ற தீச்­சம்­ப­வங்­க­ளை­யும் மதிப்­பிட்­டுக் கண்­கா­ணிக்­கும் ஆசி­யா­னின் வட்­டார நிலை­ய­மான ஏஎஸ்­எம்சி எல்­லை­தாண்­டிய புகை­மூட்­டம் குறித்த முன்­னெச்­ச­ரிக்கை சேவை­களை வழங்­கு­கிறது.

தென்­கி­ழக்­கா­சி­யா­வுக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் மேலும் வெப்­ப­மான, வறண்ட வானி­லை­யைக் கொண்­டு­வ­ரும் 'எல் நினோ' பருவநிலை இவ்­வாண்­டின் இரண்­டாம் பாதி­யில் ஏற்­படும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

காட்­டுத் தீச் சம்­ப­வங்­க­ளை­யும் வட்­டா­ரத்­தில் எல்­லை­தாண்­டிய புகை­மூட்­டத்­தை­யும் தவிர்க்க முன்­னெச்­ச­ரிக்கை, தணிப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­படி ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­வ­தாக நிலை­யம் கூறி­யது.

2015ஆம் ஆண்­டில் ஏற்­பட்ட கடு­மை­யான 'எல் நினோ' பருவநிலை பாதிப்­பால் தென்­கிழக்­கா­சி­யா­வில் அடர்த்­தி­யான புகை­மூட்­டம் நில­வி­யது.

அந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம், சிங்­கப்­பூ­ரில் தொடக்­கப்­பள்­ளி­களும் உயர்­நி­லைப் பள்­ளி­களும் ஒரு­நாள் மூடப்­பட்­டன.

2016ஆம் ஆண்டு வரை 'எல் நினோ' பருவநிலை நீடித்­த­தால், அந்த ஆண்டு ஆக வெப்­ப­மான ஆண்­டாக இருந்­தது.

கடந்த 2018ஆம் ஆண்­டி­லும் 2019ஆம் ஆண்­டி­லும் நிகழ்ந்த 'எல் நினோ' பருவநிலை காரணமாக எல்லை தாண்­டிய புகை­மூட்­டம் ஏற்­பட்­டது.

இதனால் 2019ஆம் ஆண்­டில், சிங்­கப்­பூ­ரில் சில வாரங்­க­ளுக்­குக் காற்­றின் தரம் ஆரோக்­கி­ய­மற்ற நிலை­யில் இருந்­தது.

ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூர், மலே­சியா உள்­பட தென் கிழக்கு ஆசி­யா­வில் பல பகு­தி­கள் கடு­மை­யான வெப்­பத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.