அறிவியல் நிலையத்தில் எதிர்காலத் தொழில்நுட்பம்

அறிவியல் நிலையத்தில் எதிர்காலத் தொழில்நுட்பம்

2 mins read
4f5848e4-d47a-4f3c-80c2-375e2f032365
-

இளை­யோ­ருக்­காக இளை­யோ­ரின் சிந்­த­னை­யால் உரு­வான அறி­வி­யல் நிலை­யக் கண்­காட்சி ஜூன் பள்ளி விடு­மு­றைக் காலத்­தில் தொடங்­கி­யுள்­ளது.

அந்­தக் கண்­காட்சி வளர்ந்து வரும் புதிய தொழில்­நுட்­பங்­கள் குறித்து கவ­னத்தை ஈர்க்­கக்­கூடிய, இரு­வ­ழித் தொடர்பு அனு­ப­வ­மாக அமை­கிறது.

அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்­கக் குழு­ம­மும் சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­ய­மும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள அந்த நிரந்­த­ரக் கண்­காட்­சியை தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரும், அறி­வார்ந்த தேச, இணை­யப் பாது­காப்­புக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு­வாட்டி ஜோச­ஃபின் டியோ நேற்று திறந்­து­வைத்­தார்.

அறி­வி­யல் நிலை­யத்­தில் அமைந்­துள்ள அந்­தக் கண்­காட்சி 10 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­துள்ள இளம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஊக்­க­மளிக்க, தொழில்­நுட்ப முறை­களை எளி­மைப்­ப­டுத்­து­கிறது.

அவர்­கள் எதிர்­கால தொழில்­நுட்­பங்­களில் தங்­களை ஈடு­படுத்­திக்­கொள்ள அது வழி­வ­குக்­கிறது.

கண்­காட்சி, பெற்­றோ­ருக்­கும் பிள்­ளை­க­ளுக்­கும் இடை­யி­லான பிணைப்பை வளர்த்து, புதிய தொழில்­நுட்­பங்­கள் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சாத்­தி­யங்­கள் பற்றி சமூ­கத்­தில் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்த நோக்­கம் கொண்­டுள்­ளது.

அந்­தக் கண்­காட்­சி­யில் அறி­வி­யல் ரீதி­யான முறை­களை எளி­தாக விளக்­கும் எட்­டுப் பகு­தி­கள் உள்­ளன.

கண்­காட்­சி­யின் தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசிய திரு­வாட்டி டியோ, தொழில்­நுட்ப முறை­கள் எளி­தில் எட்­டக்­கூ­டி­ய­வை­யா­க­வும் புரிந்­து­கொள்­ளக் கூடி­ய­வை­யா­க­வும் அமை­ய­ வேண்­டும் என்று அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்­கக் குழு­மம் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னார்.

கடந்த ஆண்டு கண்­காட்­சி­யின் தொடக்­கக் கட்­டங்­களில் வெவ்­வேறு சமூ­கக் குழுக்­க­ளி­­ட­மி­ருந்து கருத்­து­கள் திரட்­டப்­பட்­டன.

சங்­காட் சாங்கி உயர்­நி­லைப் பள்­ளி­யி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 40 மாண­வர்­கள் 2022ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் நடை­பெற்ற கலந்து­ரை­யா­டல்­களில் பங்­கேற்­ற­னர்.

மேம்­பா­டு­க­ளுக்­கான சிந்­த­னை­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் அவர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

கண்­காட்சி நேற்று முதல் பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­விடப்­பட்­டது. சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யத்­திற்­கான பொது நுழை­வுச்­சீட்­டைக் கொண்டு கண்­காட்­சிக்­குச் செல்­ல­லாம்.