அதிவேகமாக காரைச் செலுத்தி மரணம் விளைவித்த மாதுக்கு 30 மாதச் சிறை, பத்தாண்டு வாகனமோட்டத் தடை

அதிவேகமாக காரைச் செலுத்தி மரணம் விளைவித்த மாதுக்கு 30 மாதச் சிறை, பத்தாண்டு வாகனமோட்டத் தடை

2 mins read
363eb8ed-8e44-423c-aab8-319c5fed1fd0
-

தீவு விரை­வுச் சாலை­யில் 2021ஆம் ஆண்டு அதி­வே­க­மாக காரைச் செலுத்தி, ஐந்து வாக­னங்­கள் தொடர்­பான விபத்தை ஏற்­ப­டுத்­திய மாதுக்கு நேற்று 30 மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிறை­யில் இருந்து வெளி­யான நாள் முதல் பத்­தாண்­டு­கள் அவர் எந்த வித­மான வாக­னத்­தை­யும் ஓட்ட இய­லா­த­வாறு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

35 வய­தா­கும் இங் வென் ஸுன், 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி இரவு 9.20 மணி­ய­ள­வில், தனது காரை மணிக்கு 215 கிலோ­மீட்­டர் வேகத்­தில் செலுத்­தி­னார்.

கட்­டுப்­பாட்டை இழந்த கார் சாலை நடு­வில் உள்ள தடுப்­பில் மோதி பின்­னர் ஒரு மோட்­டார் சைக்­கிளை மோதி­யது.

அந்த மோட்­டார் சைக்­கிளை ஓட்­டிய 31 வயது ஆட­வர் சாலை­யில் தூக்கி வீசப்­பட்­டார்.

இங்­கின் கார் பிறகு மேலும் ஒரு மோட்­டார் சைக்­கிள், லாரி, கார் ஆகி­ய­வற்­று­டன் மோதி­யது.

இரண்­டா­வது மோட்­டார் சைக்­கிளை ஓட்­டி­ய­வ­ரும் சாலை­யில் தூக்கி வீசப்­பட்­டார்.

லாரி அதன் வலப்­பக்­கம் கவிழ்ந்­தது. அதில் பய­ணம் செய்த பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த இரு­வர் சாலை­யில் தூக்கி வீசப்­பட்­ட­னர்.

அதன் பிறகு இங்­கின் கார் சாலைத் தடுப்பை மோதி நின்­றது. உடனே தீப்­பி­டித்­தது.

விபத்தை அடுத்து முதல் மோட்­டார் சைக்­கி­ளோட்டி சுய நினை­வற்ற நிலை­யில் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார். பின்­னர் அவர் உயி­ரிழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பங்­ளா­தேஷ் ஆட­வர்­களில் ஒரு­வ­ருக்கு இடது மணிக்­கட்­டில் எலும்பு முறிவு உள்­பட பல காயங்­கள் ஏற்­பட்­டன. மற்­ற­வ­ருக்கு முது­குத்­தண்­டில் எலும்பு முறிவு ஏற்­பட்­டது.

இரண்­டா­வது மோட்­டார் சைக்­கி­ளோட்­டிக்­குக் கையில் காயம் ஏற்­பட்­டது. அனை­வ­ரும் மருத்துவ­ம­னை­யில் சிகிச்சை பெற்­ற­னர்.

இங் நேற்று $15,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். அடுத்த மாதம் 12ஆம் தேதி அவர் தமக்கு விதிக்­கப்­பட்ட சிறைத்­தண்­ட­னையை நிறை­வேற்­றத் தொடங்­கு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.