'லிஷா'வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கிறார் ரெகுநாத் தியாகராஜன்

'லிஷா'வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கிறார் ரெகுநாத் தியாகராஜன்

2 mins read
40abc72d-d69b-428d-87bf-7279a0916389
-

சபிதா ஜெய­கு­மார்

'லிஷா' எனப்­படும் லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் அதன் புதிய தலை­வரை அறி­வித்­துள்­ளது.

'லிஷா'வின் புதிய தலை­வ­ராக திரு ரெகு­நாத் தியா­க­ரா­ஜன் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்.

சங்­கத்­தின் முத­லாம் துணைத் தலை­வ­ராக திரு முனி­சாமி ஓம் பிர­காஷ் அறி­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இரண்­டாம் துணைத் தலை­வ­ராக திரு­வாட்டி ராஜ­லக்‌ஷ்மி தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் காலை 10 மணிக்கு 'சிண்டா' அரங்­கத்­தில் 'லிஷா'வின் ஐந்­தா­வது ஆண்­டுப் பொதுக்­கூட்­டம் நடை­பெற்­றது. அந்­தப் பொதுக்­கூட்­டத்­தில் புதிய தலை­மைத்­து­வம் குறித்து அறி­விக்­கப்­பட்­டது.

கௌர­வச் செய­லா­ள­ராக திரு ருத்­தி­ரா­பதி பார்த்­த­சா­ர­தி­யும் துணை கௌர­வச் செய­லா­ள­ராக திரு வைரப்ப தேவர் ராம­மூர்த்­தி­யும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கௌர­வப் பொரு­ளா­ள­ராக திரு செல்­வம் வர­தப்­ப­னும் துணை கெள­ர­வப் பொரு­ளா­ள­ராக திரு ஷேக் ஃபக்­ரு­தீ­னும் நேற்று முன்­தி­னம் பொறுப்­பேற்­றுக் கொண்­ட­னர்.

நிர்­வா­கக் குழு­விற்கு எட்டு உறுப்­பி­னர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர். மூன்று ஆலோ­ச­கர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

'லிஷா' உறுப்­பி­னர்­களில் மேலும் ஆறு பேர், நிர்­வா­கக் குழு­வில் இணை­வ­தற்கு சங்­கத்­தால் தேர்வு செய்­யப்­ப­டு­வர்.

புதி­தா­கப் பொறுப்­பேற்­றுக்­கொண்ட நிர்­வா­கத்­தின் முதல் செயற்­கு­ழுக் கூட்­டத்­திற்­குள் அந்த ஆறு பேரும் தெரி­வு­செய்­யப்­ப­டு­வர் என்று சங்­கம் கூறி­யது.

'லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம்' என்று தற்­போது அழைக்­கப்­படும் 'லிஷா', இனி 'லிட்­டில் இந்­தியா கடை உரி­மை­யா­ளர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம்' என்று அழைக்­கப்­படும். பெயர் மாற்­றம் உட­ன­டி­யாக அம­லுக்கு வரும் வகை­யில் தீர்­மா­னம் இயற்­றப்­பட்­டுள்­ளது.

மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மான 'லிஷா' எனும் சுருக்­க­மான பெயர் தக்­க­வைத்­துக்­கொள்­ளப்­படும் என்று கூறப்­பட்­டது.

​ஐந்­தா­வது ஆண்­டுப் பொதுக்­கூட்­டம் நேற்று முன் தினம் நண்­ப­கல் வாக்­கில் நிறை­வு­பெற்­ற­தாக லிட்­டில் இந்­தியா கடை உரி­மை­யா­ளர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் கூறி­யது.