மாணவர்களுக்கு உதவும் லீ குவான் இயூ நூற்றாண்டு நிதி

சிங்­கப்­பூர் முன்­னாள் பிர­த­மர் அம­ரர் திரு லீ குவான் இயூ­வின் நூறா­வது பிறந்­த­நாளை முன்­னிட்டு, மாண­வர் தலை­வர்­களை உரு­வாக்­க­வும் வசதி குறைந்த பின்­ன­ணி­யி­லி­ருந்து வரு­வோ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­க­வும் உத­வும் நிதி நேற்று தொடங்­கப்­பட்­டது.

‘லீ குவான் இயூ நூற்­றாண்டு நிதி’ என்று அழைக்­கப்­படும் இந்­நிதி, இது­வரை தனி­யார் மற்­றும் மக்­கள் துறை­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட $82 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட தொகை­யி­லி­ருந்து இந்நிதி உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

அம­ரர் திரு லீ 1923, செப்­டம்­பர் 16ஆம் தேதி பிறந்து, தமது 91வது வய­தில் 2015ஆம் ஆண்­டில் மறைந்­தார்.

திரு லீயின் 100வது பிறந்­த­நாள் கொண்­டாட்­டங்­க­ளின் தொடர்­பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நிகழ்ச்­சி­களில், சிங்­கப்­பூர் முன்­னோ­டித் தலை­மு­றைத் தலை­வர்­க­ளின் பண்­பு­நெ­றி­களும் கொள்­கை­களும் பிர­தி­ப­லிக்­கும் என்று துணைப் பிர­த­மர் நேற்று தனது உரை­யில் தெரி­வித்­தார்.

“நமது இளை­ய தலை­முறையை உரு­வாக்­கு­தல், அவர்­கள் தங்­கள் முழுத் திறனை அடைய உத­வு­தல் முத­லி­யவை அவற்­றுள் நாம் எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டிய முக்­கிய படிப்­பினை. நமது மக்­களே சிங்­கப்­பூ­ருக்கு இருக்­கும் ஒரே வளம்.

“அத­னால்­தான் ஆரம்­ப­கா­லங்­களில் நாம் சிர­மப்­பட்­டா­லும், திரு லீ மக்­க­ளின் மீது முத­லீடு செய்­வ­தற்கு முன்­னு­ரிமை கொடுத்து வந்­தார். அவர் அடிக்­கடி இளை­யர்­க­ளைச் சந்­தித்து, அவர்­களை சமூக நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­க­வும் நாட்டு நிர்­மா­ணத்­தில் பங்­க­ளிக்­க­வும் உற்­சா­கப்­ப­டுத்­தி­னார்,” என்­றும் திரு வோங் விவ­ரித்­தார்.

சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளின் மேம்­பாட்­டில் உத­வு­வ­தற்­கும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­க­வும், வர்த்­த­கத் தலை­வர்­க­ளால் அடித்­தள முயற்­சி­யாக தொடங்­கப்­பட்ட இந்­நிதி, இளை­யர்­க­ளைத் தொலை­நோக்­குள்ள தலை­வர்­க­ளாக உரு­வாக்­கும் நோக்­கத்­துக்கு உத­வும் என்று கல்வி அமைச்­சின் அறிக்கை நேற்று தெரி­வித்­தது.

வெள்­ளிக்கு வெள்ளி என்ற முறை­யில் அர­சாங்­கம் இந்­நிதிக்கு $50 மில்­லி­யன் வரை ஆத­ர­வ­ளிக்­கும் என்­றும் திரு வோங் சொன்­னார். கல்வி அமைச்­சின் கல்வி நிதித் திட்­டத்­தின் கீழ், ஒவ்­வோர் ஆண்­டும் 2,000 மாண­வர்­கள் உப­கா­ரச் சம்­ப­ளங்­கள், உத­வித் திட்­டங்­கள் மூலம் உதவி பெறு­வார்­கள்.

சிங்­கப்­பூர் இளம் தலை­வர்­கள் திட்­டத்­துக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும் இந்­நி­தித் திட்­டத்­தை­யும் நகர பசுமை மற்­றும் சுற்­றுப்­பு­ற­வி­ய­லுக்­கான லீ குவான் இயூ பட்­டக்­கல்­விக்­குப் பிந்­திய உப­கா­ரச் சம்­ப­ளத் திட்­டத்­தை­யும் நேற்று திரு வோங் தொடங்கி வைத்­தார்.

மேலும், லீ குவான் இயூ உப­கா­ரச் சம்­பள விரு­துத் திட்­டத்­தின் விரி­வாக்­கத்­துக்­கும் வசதி குறைந்த 1,000 தொழில்­நுட்­பக் கல்­விக் கழக, பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ர­வ­ளிக்­க­வும் இந்­நிதி உத­வும் என்று அமைச்­சின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இத்­திட்­டத்­தில் பங்­கு­கொள்­ளும் முதற்­தொ­குதி 580 மாண­வர்­களை நேற்று திரு வோங் வர­வேற்­றார். பண்­பு­ந­லன், ஊக்­கம் ஆகி­யவை தலை­மைத்­து­வத்­துக்கு முதற்­படி பண்­பு­கள் என்று அவர்­க­ளுக்கு எடுத்­து­ரைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!