புகைமூட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கவும்

புகைமூட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கவும்

2 mins read
fa173ac3-1db1-42f1-ae29-29e7ab3d8d6a
-

ஜூன் மாதத்­தி­லி­ருந்து வெப்­ப­மான, வறண்ட வானிலை நிலைமை சிங்­கப்­பூ­ரைத் தாக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், எல்லை தாண்­டிய புகை­மூட்­டம் ஏற்­பட வாய்ப்­புண்டு. ஆகவே, அதை எதிர்­கொள்ள N95 முகக் கவ­சங்­களும் காற்று சுத்­தி­க­ரிப்­பான்­களும் போதிய அள­வில் இருப்­பதை பொது­மக்­கள் உறுதி செய்­து­கொள்ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

புகை­மூட்­டம் கடு­மை­யானால், அதற்கு ஏற்­ற­வாறு தகுந்த ஒருங்­கி­ணைந்த நட­வடிக்­கை­களை புகை­மூட்­டத்­துக்கு எதி­ரான அர­சாங்­கத்­தின் அமைச்­சு­க­ளுக்­கி­டை­யி­லான பணிக்­குழு எடுக்­கும் என்று சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு நிலை­யம் நேற்று தெரி­வித்­தது.

பொது­வாக, சிங்­கப்­பூ­ரி­லும் அதைச் சுற்­றி­யுள்ள வட்­டார நாடு­க­ளி­லும் ஜூன் முதல் செப்­டம்­பர் மாதம் வரைப்­பட்ட காலம் வறண்­ட­தாக இருக்­கும். ஆனால், எல் நினோ நிலை­மை­களும் இந்­திய பெருங்­க­ட­லின் இரு­முனை நிலை­மை­யும் வறண்ட காலத்தை அக்­டோ­பர் வரைக்­கும் நீடிக்­கச் செய்­ய­லாம் என்­றும் ஆய்வு நிலை­யம் கூறி­யது.

"வெப்­ப­மான, வறண்ட வானிலை காட்­டுத் தீ, புதர் தீ சம்­ப­வங்­களை ஏற்­ப­டுத்­தும். ஆக, ஜூன் மாதம் முதல் இது­போன்ற சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்க வாய்ப்­புண்டு.

"சிங்­கப்­பூ­ருக்கு அரு­கில் உள்ள நாடு­களில் தீச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தால் அதி­லி­ருந்து கிளம்­பும் புகையை, தென்­மேற்கு திசை நோக்கி வீசும் காற்­றால் எல்லை தாண்டி சிங்­கப்­பூ­ரைப் பாதிக்­கும்," என்­றும் வானிலை ஆய்வு நிலை­யம் விவ­ரித்­தது.

புகை­மூட்­டம் அதி­க­மா­னால், அது குறித்த காற்­றுத் தூய்­மைக்­கேட்டு முன்­ன­றி­விப்பை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் அதன் இணை­யத் தளம் (www.nea.gov.sg), myENV கைப்­பேசி செயலி, புகை­மூட்ட இணைய வாசல் (www.haze.gov.sg) ஆகி­ய­வற்­றின் மூலம் மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கும்.