உள்துறைக் குழுவுக்கு உதவும் புதிய புத்தாக்க நிலையம்

உள்துறைக் குழுவுக்கு உதவும் புதிய புத்தாக்க நிலையம்

2 mins read
58795d4e-4eb4-46d8-99bc-ed1b86dd7423
-

பரி­ணாம வளர்ச்­சி­யின் கார­ண­மாக, புதிய தொழில்­நுட்­பங்­க­ளால் புதிய வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­படும் அதே­வே­ளை­யில் சவால்­களும் தலை­யெ­டுக்­கின்­றன. அதற்­கேற்ப உள்­து­றைக் குழு­வும் தனது உத்­தி­களில் மாற்­றங்­களைக் கொண்டு வர­வேண்­டும்.

அத­னால்­தான், உள்­து­றைக் குழு புதி­தா­கத் தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­க­ளு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்றி, ஆகப் புதிய புத்­தாக்­கங்­க­ளை­யும் மேம்­பா­டு­களை­யும் பயன்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நேற்று தெரி­வித்­தார்.

'ஹெட்ச்' எனும் உள்­து­றைக் குழு­வின் அறி­வி­யல், தொழில்­நுட்ப அமைப்­பின் (எச்­டி­எக்ஸ்) புதிய புத்­தாக்க நிலை­யத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் உரை­யாற்­றி­னார்.

"தொழில்­நுட்­பம் அதி­வே­க­மாக வளர்ந்து வரு­கிறது. எச்­டி­எக்ஸ் அதனை நன்கு உணர்ந்­துள்­ளது. ஆகை­யால்­தான், புதி­தா­கத் தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­க­ளு­ட­னும் சிறிய, நடுத்­தர நிறு­வனங்­க­ளு­ட­னும் அணுக்­க­மா­கப் பணி­யாற்றி, அவற்­றின் சிறந்த யோச­னை­க­ளை­யும் புத்­தாக்­கங்­களை­யும் தனது மேம்­பாட்­டுக்­குப் பயன்­ப­டுத்­திக்கொள்ள முனை­கிறது," என்­றார்.

"எச்­டி­எக்ஸ் அமைப்பு மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்­பு­தான் தொடங்­கப்­பட்­டது. இருப்­பி­னும், அது தனது உள்­து­றைக் குழு நட­வ­டிக்­கை­களில் அதிக அள­வில் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்­தி­யுள்­ளது. அதற்கு ஓர் உதா­ர­ணம், தானி­யக்க எல்லை கட்­டுப்­பாட்டு முறை.

"குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் கையா­ளும் இந்த முறை­யால், சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­களும் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­யே­றும் பய­ணி­களும் தங்­கள் கட­வுச்­சீட்­டு­கள் இல்­லா­மல் குடி­நு­ழைவை அடுத்த ஆண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து கடக்க முடி­யும் என்று அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டது.

"நமது நில­வ­ழிச் சோத­னைச் சாவ­டி­களில் கார்­க­ளுக்­கும் தானி­யங்கி குடி­நு­ழை­வுக் கடக்­கும் முறையை அமல்­ப­டுத்த சோதனை முன்­னோட்­டங்­கள் நடப்­பில் உள்­ளன.

"இது­போன்று இன்­னும் அதி­க­மாக செய்ய எச்­டி­எக்ஸ் அமைப்­பும் புதி­தாக தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­களும் இணைந்து உள்­து­றைக் குழு அதி­கா­ரி­க­ளு­டன் பணி­யாற்­றும்.

"புதி­தாக தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­க­ளு­டன் நீக்­குப்­போக்­கான முறை­யில் எச்­டி­எக்ஸ் அமைப்பு தொடர்ந்து வேலை செய்­யும். அர­சாங்க சேவை­யைப் போலல்­லா­மல், இது ஒரு முற்­றி­லும் மாறு­பட்ட வேலை கலா­சா­ரத்­தைக் கொண்­டி­ருக்­கும்," என்­றும் அமைச்­சர் சண்முகம் விளக்­கி­னார்.

ஆயர் ராஜா­வில் உள்ள லாஞ்ச்­பேட்@ஒன்-நார்த் கட்­ட­டத்­தில் அமைந்­துள்ள 'ஹெட்ச்' அமைப்பு, தனது ஊக்­க­ம­ளிப்பு திட்­டம் மூலம் புதி­தா­கத் தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­களை ஈர்க்­க­வும், பொது­மக்­க­ளின் இடர்­காப்­புக்­கும் பாது­காப்­புக்­கும் உத­வும் புத்­தாக்­கத் திட்­டங்­க­ளுக்கு வழி வகுக்­கும் தொழில்­நுட்­பங்­களை ஈர்க்­க­வும் நோக்­கம் கொண்­டுள்­ளது என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.