வட்டாரப் பாதைகளை விரிவாக்க எஸ்ஐஏ, கருடா நிறுவனங்கள் இணக்கம்

வட்டாரப் பாதைகளை விரிவாக்க எஸ்ஐஏ, கருடா நிறுவனங்கள் இணக்கம்

2 mins read
d7da49b4-215d-4d49-bfd7-db34a29fe35e
இந்­தப் பங்­கா­ளித்­து­வம் எஸ்­ஐ­ஏயை தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் பிர­தான விமான நிறு­வ­ன­மாக உரு­வெ­டுப்­பதை வலுப்­ப­டுத்­து­கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் எர்­லைன்­ஸும் (எஸ்­ஐஏ) இந்­தோ­னீ­சி­யா­வின் விமான நிறு­வ­ன­மான கரு­டா­வும் இணைந்து ஒரு வணிக ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட உள்­ளன.

அந்த ஒப்­பந்­தம் ஒருங்­கி­ணைந்த விமான அட்­ட­வணை­கள் மற்­றும் கட்­ட­ணங்­கள் சார்ந்­தது. இது தொடர்­பான அறி­விப்பு திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.

இது 2021ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் கையெ­ழுத்­தான இரண்­டு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளின் விரி­வாக்­கம் ஆகும்.

அந்த ஒப்­பந்­தம் சிங்­கப்­பூ­ருக்­கும் பாலி, ஜகார்த்தா, சுர­பாயா போன்ற வழித்­த­டங்­க­ளுக்­கும் விமா­னச் சேவை வழங்­கு­வது தொடர்­பா­னது.

ஒன்­றி­ணைந்து பய­ணக்­கட்­ட­ணம் தொடர்­பான தயா­ரிப்­பு­கள் மற்­றும் பெரு­நி­று­வ­னத் திட்­டங்­கள் உள்­ளிட்ட புதிய முயற்­சி­களை செயல்­ப­டுத்­து­வ­தும் அதில் அடங்­கும்.

தென்­கி­ழக்­கா­சிய வட்­டா­ரத்­தில் விமான சேவையை விரி­வு­படுத்த நினைக்­கும் எஸ்­ஐ­ஏக்கு இது மிகப்­பெ­ரிய வெற்றி.

அதே நேரம் கொவிட்-19 ஏற்­ப­டுத்­திய நிதி அழுத்­தத்­தி­லி­ருந்து மற்ற வட்­டார விமான நிறு­வ­னங்­கள் மீண்டு வரு­கின்­றன.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் மலே­சிய விமான நிறு­வ­னத்­து­ட­னும், டிசம்­பர் மாதம் தாய் ஏர்­வேஸ் இன்­டர்­நே­ஷ­ன­லு­ட­னும் எஸ்­ஐஏ இது­போன்ற ஒரு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டது.

இந்­தப் பங்­கா­ளித்­து­வம் எஸ்­ஐ­ஏயை தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் பிர­தான விமான நிறு­வ­ன­மாக உரு­வெ­டுப்­பதை வலுப்­ப­டுத்­து­கிறது.

நிறை­யப் பய­ணி­கள் எஸ்­ஐஏ யின் நீண்ட தூரம் பய­ணிக்­கும் விமா­னங்­க­ளின் மூலம் ஐரோப்பா மற்­றும் ஆசிய நாடு­களுக்­குச் செல்­ல­மு­டி­யும்.

கருடா நிறு­வ­னத்­தின் தலை­வ­ரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான திரு இர்­ஃபான் செட்­டி­ய­புத்ரா, "இந்­தோ­னீ­சிய விமான நிறு­வ­னத்­தின் செயல்­தி­ற­னை­யும் இது அதி­க­ரிக்­கும்," என்று உடன்­ப­டிக்­கை­யைப் பாராட்­டி­னார்.

எஸ்­ஐஏ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு கோ சூன் போங், இது இரண்டு நாட்­டிற்­கும் வட்­டார ரீதி­யாக விமான சேவையை அதி­க­ரிக்க உத­வும் என்று கூறி­னார்.