கணவர்மீது வெந்நீரை ஊற்றிய பெண்ணுக்கு எட்டு மாதச் சிறை

கணவர்மீது வெந்நீரை ஊற்றிய பெண்ணுக்கு எட்டு மாதச் சிறை

2 mins read
04c7cc33-5d17-41bc-9f8a-a945a5a8dd91
-

கண­வர் விவா­க­ரத்து வேண்­டும் என்று கேட்­ட­தால் அவர்­மீது வெந்­நீரை ஊற்­றிக் காயப்­ப­டுத்­திய இந்­தோ­னீ­சி­யப் பெண்­ணுக்கு எட்டு மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மலே­சி­ய­ரான 24 வயது திரு முகம்­மது ரஹிமி ஷமிர் அக­மது சஃபுவா­னைத் தாக்­கிய குற்­றத்தை ரஹிமா நிஸ்வா என்ற அந்த 29 வய­துப் பெண் ஒப்­புக்­கொண்­டார்.

இரு­வ­ரும் கடந்த 2019ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர். ஆனா­லும், 2022 டிசம்பரிலிருந்து அவர்களது மண­வாழ்­வில் புயல் வீசத் தொடங்கியது.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் ரஹி­மா­வுக்­குப் பெண் குழந்தை பிறந்­தது. இரண்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு, ரஹி­மா­வை­யும் அவ­ரின் தாயா­ரை­யும் பார்க்க திரு ரஹிமி சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து பாத்­தா­மிற்­குச் சென்­றார்.

மார்ச் 19ஆம் தேதி நடந்த அந்­தச் சந்­திப்­பில், திரு ரஹிமி விவா­க­ரத்­துக்­கான சாத்­தி­யத்­தைப் பற்­றிப் பேசி­ய­போது, ரஹிமா அப்­போது ஒன்­றும் சொல்­ல­வில்லை.

மறு­நாளே திரு ரஹிமி சிங்­கப்­பூர் திரும்­பி­விட்­டார்.

இருப்­பி­னும், ரஹி­மா­வால் அதனை அப்­ப­டியே விட்­டு­வி­ட­மு­டி­ய­வில்லை.

மார்ச் 22ஆம் தேதி ரஹிமா, சக பெண் ஊழி­யர் ஒரு­வ­ரு­டன் பாத்­தா­மி­லி­ருந்து புறப்­பட்டு சிங்­கப்­பூர் வந்­தார்.

அதற்கு மறு­நாள் தம் கண­வரின் வீட்­டிற்­குச் சென்று, தாம் குடு­வை­யில் கொண்­டு­சென்ற வெந்­நீரை அவர்­மீது ஊற்­றி­னார்.

தம்­மைப் பற்­றிய அடை­யாளம் தெரிந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக உடல் முழு­வ­தை­யும் மறைக்­கும் வகை­யி­லான கறுப்பு அங்­கி­யை­யும் கண் மட்­டும் தெரி­யும் வகை­யில் தலை­யில் முக்­கா­டும் ரஹிமா அணிந்­திருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அதன்­பின் அங்­கி­ருந்த தப்­பிய ரஹிமா, மீண்­டும் படகு முனை­யத்­திற்­குச் சென்று பாத்­தா­மிற்­குக் கிளம்­பி­னார். ஆனா­லும், அவ­ரது முயற்சி ஈடே­ற­வில்லை.

திரு ரஹி­மி­யின் உற­வி­னர்­கள் காவல்­து­றைக்­குத் தக­வல் தெரி­விக்க, கட­லோ­ரக் காவல் ­ப­டை­யினர் அந்­தப் பய­ணப் படகை மறித்து, ரஹி­மா­வைக் கைது­செய்­த­னர்.

பாதிக்­கப்­பட்ட திரு ரஹிமி சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ மனையில் சிகிச்சை பெற்­றார். அவ­ருக்கு 16 நாள்­கள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­டது.