ஒரே மாதத்தில் 14 பேருக்கு ஸிக்கா தொற்று

சிங்கப்பூரில் இவ்வாண்டு இது­வரை 15 பேர் ஸிக்கா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­னர். அதி­லும் இம்­மா­தத்­தில் மட்­டும் 14 பேரை அக்­கி­ருமி தொற்றிவிட்­டது.

மே 7 முதல் 13ஆம் தேதி வரை­யி­லான வாரத்­தில் இரு­வர் ஸிக்கா தொற்­றால் பாதிக்­கப் பட்­ட­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் இணை­யத்­த­ளம் தெரி­வித்­தது.

அதற்­க­டுத்த இரண்டு வாரங்­க­ளி­லும் தலா ஐவர் அத்­தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

கோவன் வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு ஸிக்கா தொற்­றுக் குழு­மத்­தில் மட்­டும் பாதிக்­கப் பட்­டோர் எண்­ணிக்கை 19ஆக உயர்ந்­து­விட்­டது.

டெங்கி, சிக்­குன்­குன்யா கிரு­மி­க­ளைப் பரப்­பும் ஏடிஸ் வகை கொசுக்­களே ஸிக்கா கிரு­மி­யை­யும் பரப்­பு­கின்­றன.

ஸிக்கா தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரி­டம் மூன்று முதல் 14 நாள்­க­ளுக்­குக் காய்ச்­சல், சொறி, மூட்­டு­வலி போன்ற அறி­கு­றி­கள் தென்­ப­ட­லாம்.

கடந்த 2020 மார்ச் மாதத்­தில் இருந்து சிங்­கப்­பூ­ரில் ஸிக்கா தலை­காட்­டாத நிலை­யில், சென்ற ஆண்டு அத்­தொற்­றால் இரு­வர் பாதிக்­கப்­பட்­ட­தா­கப் பதி­வா­னது.

கோவன் பகு­தி­யில் ஸிக்கா தொற்­றுக் குழு­மம் உரு­வாகி இருப்­ப­தாக இம்­மா­தம் 12ஆம் தேதி சுகா­தார அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் அறி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!