செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8a98fb84-db89-419b-9542-f1060a037e49
-

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு நிதி உதவி

23 வயதான பெனடிக்ட் லிம் செவித்திறன் குறைபாடு உடையவர். அவர் பணத்திற்காக மிகவும் சிரமப்படுகிறார். ஆனால் இவை எதுவும் அவர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் பட்டப்படிப்பு பயில்வதற்கு தடையாக இல்லை. அவர் தற்போது, இளங்கலை இரண்டாம் ஆண்டு அங்கு படிக்கிறார். தான் விண்ணப்பித்திருக்கும் புதிய படிப்புக்கான $4,000 உதவித்தொகை கிடைக்கும் பட்சத்தில் அது அவருடைய நிதிச் சிக்கல்களைக் குறைக்கும் என எண்ணுகிறார். மாதம் $1,300 வருமானம் ஈட்டும் ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்பட்ட அவர், தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மாணவராக இருந்தபோது பகுதி நேர ஊழியராக 4 ஆண்டுகள் வேலை பார்த்தார்.

'டோமோஒர்க்' திட்டம் மருந்துகளுக்கும் சிகிச்சை களுக்கும் பணம் செலுத்துவதற்கு சிரமப்படும் சிறப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டது. இது அவர்களுக்கு கூடுதல் செலவுகளால் ஏற்படும் அழுத்தங்களைக் குறைக்கும். தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ 'டோமோஒர்க்' திட்டத்தின் தொடக்க விழாவில் பேசும்போது, "இது மக்கள், தனியார் மற்றும் பொதுத்துறைகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தும். பல்வேறு பலதுறைத் தொழிற் கல்லூரிகளின் நிபுணத்துவம் மற்றும் வளங்களைக் கொண்டு இத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் உடற்குறைபாடு உடையவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகமாக உருவாக்க முடியும்," என்றார்.

எஸ்பிஎச் மீடியாவில் இணையும் ஊடக அனுபவ அதிகாரி

'கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட் மன்ட்' குழுமத்தின் தலைமைப் பெருநிறுவன அதிகாரியான குவா லே ஹூன் (படம்) எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் இயக்குநரவையில் இன்று (ஜூன் 1) முதல் இணைகிறார். எஸ்பிஎச் மீடியா நேற்று வெளியிட்ட அறிக்கையில், திருவாட்டி. குவாவின் நியமனத்தை அறிவிப்பதில் மகிழ்வதாகக் குறிப்பிட்டது. மேலும், கேப்பிட்டா லேண்ட் இன்வெஸ்ட்மன்ட் மற்றும் சேனல் நியூஸ் ஏஷியாவில் அவர் பெற்ற அனுபவங்களை யும் பொதுத்துறையில் அவர் வகித்த பதவிகளையும் அது மேற்கோள் காட்டியது.

எஸ்பிஎச் மீடியா அறக்கட்டளையின் தலைவர் திரு. கோ பூன் வான் கூறும்போது, "லே ஹூன் உடன்

மீண்டும் இணைந்து பணியாற்ற இருக்கிறேன். ஊடகத்துறை உள்ளிட்ட பொதுத்துறை, தனியார் துறையில் அவர் பெற்றுள்ள விரிவான அனுபவம் எங்களின் மின்னியல் உருமாற்றத்திற்கும் புதிய முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும். அவர் மீடியாகார்ப்பில் பணியாற்றியபோது 2013ல் இருந்து 2018 வரை சேனல் நியூஸ் ஏஷியாவின் தலைமை ஆசிரியராக இருந்தார். மேலும், பல்வேறு அமைச்சுகளின்கீழ் உள்ள பொதுத் துறைகளில் 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது," என்றார்.