அதிபர் ஹலிமா: ஒற்றுமைக்கு தொண்டூழியம் வலுசேர்க்கும்

அதிபர் ஹலிமா: ஒற்றுமைக்கு தொண்டூழியம் வலுசேர்க்கும்

2 mins read
566004aa-cc47-4aae-8a0c-3c32d4555e05
-

ஒற்­று­மையே பலம் என்­பதை கொவிட்-19 கொள்­ளை­நோய் நிரூ­பித்து இருப்­ப­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார். மேலும், சிங்­கப்­பூ­ரர்­கள் இடை­யி­லான இந்த ஒற்­று­மை­யை­யும் நாட்டு நல­னை­யும் தொண்­டூ­ழி­யம் வலுப்­ப­டுத்த உத­வும் என்­றார் அவர்.

"நாம் தொண்டு செய்­யும்­போது நம்­மை­வி­டப் பெரி­தான ஒன்­றின் அங்­க­மாக மாறு­கி­றோம். வெவ்­வேறு வாழ்க்­கைச் சூழ­லைக் கொண்­ட­வர்­க­ளைச் சந்­தித்து சமு­தா­யத்­தில் உள்ள பன்­மு­கத்­தன்­மையை மதிக்­கக் கற்­றுக்­கொள்­கி­றோம்," என்று திருவாட்டி ஹலிமா கூறி­னார்.

'#கிவ்­அஸ்­ஒன்­எஸ்ஜி' இயக்­கத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் நேற்று உரை­யாற்­றிய அதி­பர், சமு­தா­யத்­தை­யும் நாட்­டை­யும் வளர்ப்­ப­தில் தொண்­டூ­ழி­யம் ஆற்­றும் பங்கை விவ­ரித்­தார்.

சுவா சூ காங் சமூக மன்­றத்­தில் நடை­பெற்ற அந்­நி­கழ்ச்­சி­யில் சிறார்­கள் முதல் முதி­யோர் வரை சுமார் 180 பொது­மக்­கள் பங்­கேற்­ற­னர்.

இவ்­வாண்­டின் தேசிய தின அணி­வ­குப்பை ஒட்டி தொடங்­கப்­பட்ட இரண்டு இயக்­கங்­களில் ஒன்­றான '#கிவ்­எஸ்­ஒன்­எஸ்ஜி', தொண்­டூ­ழி­யத்­தை­யும் லாப­நோக்­க­மற்ற இயக்­கங்­களில் பங்­கா­ளி­க­ளா­வ­தை­யும் ஊக்­கு­விக்க முனை­கிறது.

'#யுனைட்­டட்­எஸ்­ஒன்­எஸ்ஜி' என்ற இரண்­டா­வது இயக்­கம், நேர­டி­யா­க­வும் மின்­னி­லக்­கத் தளங்­கள் வழி­யா­க­வும் சிங்­கப்­பூரை இணைய ஊக்­கு­விக்­கிறது.

இவ்­வாண்­டின் தேசிய தினத்­தின் 'ஒன்­றி­ணைந்து முன்­னோக்­கிச் செல்­வோம்' முழக்­கம் எதிர்­கா­லத்தை நம்­பிக்­கை­யு­டன் காண சிங்­கப்­பூரை ஊக்­கு­விப்­ப­தாக அதி­பர் தம் உரை­யில் தெரி­வித்­தார.

தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­படும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருந்­தா­லும் சமூக சேவை செய்யும் உணர்வை மேலும் அதிகரிக்க முடி­யும் என்று அதி­பர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் தொண்­டூ­ழி­யத்தை ஊக்­கு­விக்­கும் 'எஸ்ஜி கேர்ஸ்' இயக்­கத்­தின்­கீழ் இயங்­கும் 24 தொண்­டூ­ழிய நிலை­யங்­கள் பற்­றிக் கூறிய திரு­வாட்டி ஹலிமா, அந்­நி­லை­யங்­களில் 64,000 பேருக்கு மேல் பணி­யாற்­றி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார். அத்­து­டன் அவை 5,000க்கும் கூடு­த­லான தொண்­டூ­ழி­யத் தலை­வர்­க­ளை­யும் சமூக அமைப்­பு­க­ளு­டன் 3,000 பங்­கா­ளித்­து­வங்­க­ளை­யும் உரு­வாக்­கி­யுள்­ளன.

சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளது ஆர்­வத்­தின் அடிப்­ப­டை­யில் தொண்­டூ­ழி­யம் செய்­யும் வாய்ப்பை உரு­வாக்­கு­வ­தில் தொண்­டூ­ழிய நிலை­யங்­கள் முக்­கிய பங்கு வகித்­தி­ருப்­ப­தாக அவர் சுட்­டி­னார்.