ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் எனக் கூறி மோசடி செய்ய முயற்சி

1 mins read
5a22ff65-5ea2-4007-865a-1c5f3ae1a6fa
-

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் செய்­தி­யா­ளர் எனத் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்ட ஒரு­வர், டிபி­எஸ் வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ரின் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைப் பெற முயன்­றது குறித்து அவ்­வங்கி காவல்­து­றைக்கு விழிப்­பூட்­டி­யது.

இது புது­வ­கை­யான மோச­டித் தந்­தி­ரம் என்று டிபி­எஸ் வங்கி குறிப்­பிட்­டது.

'டேனி­யல்' என்று தம்­மைக் கூறிக்­கொண்ட அந்­தச் சந்­தே­கப் பேர்­வ­ழிக்­கும் டிபி­எஸ் பெண் வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ருக்­கு­மான உரை­யா­ட­லின் திரைச்­சு­டுவு (ஸ்கி­ரீன்­ஷாட்) ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

அதில், டிபி­எஸ் வங்­கி­யி­ட­மி­ருந்து அப்­பெண்­ணின் விவ­ரங்­க­ளைத் தாம் பெற்­ற­தாக 'டேனி­யல்' கூறி­யுள்­ளார். அண்­மைய மோசடி ஒன்­றில் அப்­பெண் சிக்­கி­ய­தா­கத் தமக்­குத் தெரி­ய­வந்­த­தா­கக் கூறிய டேனி­யல், அத்­த­கைய மோச­டி­கள் குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்த சில தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள விருப்­பமா என்­றும் கேட்­டுள்­ளார்.

அப்­பெண் அளிக்­கும் தக­வல்­கள் அனைத்­தும் ரக­சி­ய­மாக வைக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

அப்­பெண் குறித்த விவ­ரங்­களை டேனி­யல் எவ்­வாறு பெற்­றார் என்­பது தெரி­ய­வில்லை. ஆனால், அவ­ரது குறுஞ்­செய்­தி­களில் இலக்­கண, நிறுத்­தற்­குறிப் பிழை­கள் இருந்­தன. இத்­த­கைய பிழை­களே பெரும்­பா­லும் அவை மோசடி என்­ப­தைக் காட்­டிக் கொடுத்­து­வி­டும்.

முறை­யான முன்­ன­னு­மதி இல்­லா­மல் மூன்­றாம் தரப்­பி­டம் தனிப்­பட்ட அல்­லது நிதி சார்ந்த தக­வல்­கள் ஒரு­போ­தும் பகிர்ந்து­கொள்­ளப்­ப­டாது என்று டிபி­எஸ் வங்கி விளக்­க­ம­ளித்­துள்­ளது.

சம்­பந்­தப்­பட்ட வாடிக்­கை­யா­ள­ரை­யும் தொடர்­பு­கொண்­ட­தாக அவ்­வங்கி தெரி­வித்­தது.

டேனி­யலின் எண்­ணுக்கு அழைத்­த­போ­தும் குறுஞ்­செய்தி அனுப்­பி­ய­போ­தும் பதி­லில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.