அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் திருக்குடமுழுக்கு - கனத்த மழைக்கும் சளைக்காத பக்தி

டேங்க் ரோட்டில் புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழாவைக் காண வியாழன் (ஜூன் 1 ஆம் தேதி) காலை வந்த பக்தர்களுடன் மழை மேகங்களும் திரண்டன. 

ஆனால் பக்திக்கும் உறுதிக்கும் வளைந்தது வானிலை. தொடக்கத்தில் கனமாகப் பெய்தபின் திருக்குடமுழுக்கின் முக்கிய அங்கமான கலசம் ஊற்றுதலின்போது மழைப்பொழிவு குறைந்தது. 

வண்ணமயமான கோலம், கோயிலின் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தில் மட்டுமல்ல, பல வண்ண மழையங்கிகளை அணிந்திருந்த பக்தகோடிகள் இடையிலும் காணப்பட்டது.

கோயிலின் 75 அடி உயர கோபுரத்தின் மீது சிவாச்சாரியர்கள் ஏறி யாகசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட நன்னீரை காலை 9.15 மணிக்கு ஊற்றியதைச் சுமார் 10,000 பக்தர்கள் மழை நீரில் நனைந்தபடியே  கூடியிருந்து கண்டனர். 

முதியோர், சக்கர நாற்காலியில் வந்திருந்தோர் உள்ளிட்ட பலர், குடமுழுக்கை அமர்ந்தபடியே காணும் வசதியை ஆலயம் ஏற்படுத்தியது. இப்பெரும் நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 1,000 தொண்­டூ­ழி­யர்­கள் ஆலய வளாகத்தைச் சுற்றி இருந்து பக்தர்களுக்கு வழிகாட்டினர்.

பக்­தர்­க­ளுக்கு உணவு பரி­மாறு­வ­தற்­காக 1,000 இருக்­கை­களுக்­கான இட­வ­சதி உடைய கூடா­ரம் ஒன்று ரிவர் வேலி ரோட்­டி­லுள்ள திறந்­த­வெ­ளி­யில் அமைக்­கப்­பட்டது. 

நிஜ மழையுடன், பிரபல செவ்விசைப் பாடகர் சீர்காழி சிவசிதம்பரமும் பன்னிரண்டு இசைக்கலைஞர்களும், வந்திருக்கும் பக்தர்கள் மீது இசைமழை பொழிந்தனர். 

குட­மு­ழுக்­கிற்­காக டேங்க் ரோடு மே 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஜூன் 1 ஆம் தேதி இரவு 9 மணி வரை மூடப்­பட்­டுள்ளது. அத்துடன் கிள­மென்­சியூ அவென்யூ, ரிவர் வேலி ரோடு ஆகி­யவை பின்­னி­ரவு 1 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்­பட்­டுள்ளன. சாலைப் போக்குவரத்தில் இன்று காலை நிலவரப்படி அதிக நெரிசல் இருப்பதால் பக்தர்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வருகை தர முடியாததற்குப் பிரதமர் வருத்தம்

பிரதமர் லீ சியன் லூங் இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டபோதும் அவருக்கு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டதால் வருகை அளிக்க முடியவில்லை. 

“அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கைக் காண ஆவலுடன் காத்திருந்தபோதும் மற்றவர்களின் பாதுகாப்புக் கருதி நான் இதனைத்த தவிர்க்க வேண்டியுள்ளது,” என்று சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிட்டார் பிரதமர் லீ. 

“ஏற்பாட்டாளர்களிடமும் திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான குடமுழுக்கிற்காகவும் கொண்டாட்டங்களுக்காகவும் என் வாழ்த்துக்கள்,” என்று மேலும் சொன்னார் அவர்.

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், கலாசார, சமூக, இளையர் அமைச்சர், இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் தொங் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

வருகை அளிக்கும் பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 30,000 ஆயிரத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!