கிரிப்டோ.காம் இணையத்தளத்துக்கு கட்டண உரிமம் கிடைத்துள்ளது
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மின்னிலக்க நாணய பரிமாற்ற நிறுவனமான கிரிப்டோ.காம் (Crypto.com) இணையத்தளத்துக்கு, மின்னிலக்க கட்டண டோக்கன் கொடுக்கக்கூடிய பிரதான கட்டணக் கழக உரிமத்தை சிங்கப்பூர் நாணய ஆணையம் வழங்கியுள்ளது. இந்த உரிமத்தைக் கொண்டு அந்நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னிலக்க பணம் வழங்குதல், கணக்கு வழங்குதல், பணப் பரிமாற்றம், எல்லை தாண்டிய மற்றும் உள்நாட்டுப் பணப் பரிமாற்றம் போன்ற மின்னிலக்க கட்டண டோக்கன் வழங்கலாம் என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது.
இந்நிறுவனத்துக்கு ஆணையம் ஓராண்டுக்கு முன் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. இது குறித்து கருத்துரைத்த கிரிப்டோ.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிறிஸ் மார்ஸாலேக், மின்னிலக்க சொத்துகள் துறைக்கான பொறுப்புள்ள புத்தாக்க நிறுவனமாக உலக அளவில் அங்கீகாரத்தை இந்த உரிமம் அளித்துள்ளது என்றார்.
மனநலச் சுகாதாரச் செயலி மூலம் மக்களின் போராட்டங்கள் பகிர்வு
மனநலச் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களின் போராட்டங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒருவர் மற்றவருக்கு ஆறுதலாக இருக்க வகை செய்யும் புதிய செயலி, ஒரு வாரத்துக்கு முன் அறிமுகமானதில் இருந்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஹடல்வெர்ஸ்' எனும் அது சமூக ஊடகச் செயலி போல செயல்படுகிறது. அதன் மூலம் மக்கள் தங்கள் உணர்வுகளையும் அனுபவங்களையும் பதிவுகள் மூலம் வெளிப்படுத்தலாம். அவற்றைப் படிக்கும் மற்றவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் குறுஞ்செய்தி அனுப்பலாம். அது எழுத்து வடிவாகவும் குரல் பதிவாக வும் இருக்கலாம். அதனுடன் படிமங்களையும் ஸ்டிக்கர் களையும் இணைக்கலாம். இவையெல்லாம் அனுப்புபவரின் அடையாளம் வெளியே தெரியாமல் பகிரப்படலாம்.
மே மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற இச்செயலியின் அறிமுக நிகழ்ச்சியில், ஒலிம்பிக் வெற்றியாளர் ஜோசஃப் ஸ்கூலிங், ஆசிய விளையாட்டுகளில் ஜியு-ஜிட்சு போட்டியின் வெள்ளிப் பதக்க வெற்றியாளரான கான்ஸ்டன்ஸ் லியேன், இணைய பிரபலம் ஹன்னா அல்காஃப் போன்ற பிரபலங்கள் தோன்றிய காணொளி யில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக நினைக்க வேண்டாம். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைப் போல் மற்றவர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன எனும் செய்தி அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிமுகம் கண்டதிலிருந்து அச்செயலி சுமார் 5,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அது தற்போது ஆப்பிள் செயலி கோப்பில் மட்டும்தான் கிடைக்கிறது.
சிங்கப்பூர்-சீனா இருதரப்பு தற்காப்பு நேரடித் தொலைபேசி சேவை உடன்பாடு
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சும் சீனத் தற்காப்பு அமைச்சும் தங்களுக்கிடையிலான உயர்மட்ட தொடர்பு முறையை வலுப்படுத்த நேரடித் தொலைபேசி சேவையைத் தொடங்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னுக்கும் சீனத் தற்காப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு வுக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு கையெழுத்துச் சடங்கு இடம்பெற்றது.
திரு லி, ஷங்ரிலா தற்காப்பு உச்சநிலை கலந்துரையாட லில் பங்கேற்க சிங்கப்பூருக்கு வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தற்காப்பு அமைச்சராகப் பதவியேற்ற பிறகு
திரு லி கலந்துகொள்ளும் முதலாவது ஷங்ரிலா கலந்துரையாடல் இதுவாகும்.
'பாதுகாப்பான தற்காப்பு தொலைபேசி இணைப்பு' என்று அழைக்கப்படும் இந்த நேரடித் தொலைபேசிச் சேவை தொடர்பான உடன்பாடு நேற்று தற்காப்பு அமைச்சில் நடைபெற்ற 2வது சிங்கப்பூர்-சீனா தற்காப்பு அமைச்சர்கள் கலந்துரையாடலுக்குப் பிறகு உடன்பாடு கையெழுத்தானது. அதை இரு அமைச்சர்களும் பார்வையிட்டனர்.
நேற்றைய சந்திப்பில் இரு அமைச்சர்களும் இருநாடு களுக்கிடையிலான தற்காப்பு பரிமாற்றங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான மேம்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் சிங்கப்பூர்-சீனத் தற்காப்பு ஒத்துழைப்புக்கு தங்களின் வலுவான கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினர் என்று தற்காப்பு அமைச்சின் அறிக்கை கூறியது. அவர்களின் சந்திப்பு இரண்டு மணிநேரம் நீடித்தது.