பயணிகளுக்கு கூடுதல் வசதி தரும் புதிய ரயில்கள்

பயணிகளுக்கு கூடுதல் வசதி தரும் புதிய ரயில்கள்

2 mins read
c2c08e81-03fd-45de-9467-524aa1eb8eda
-
multi-img1 of 2

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் ஞாயிறு முதல் சேவைக்கு வருகின்றன

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதை­களில் கூடு­தல் இட­வ­ச­தி­யை­யும் பெரிய சன்­னல்­க­ளை­யும் கொண்­டுள்ள புதிய ரயில்­களில் நாளை மறு­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யில் இருந்து பய­ணி­கள் செல்லலாம்.

ஆறு ரயில் பெட்­டி­க­ளைக் கொண்ட 16 புதிய ரயில்­க­ளின் முதல் தொகுதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யி­லி­ருந்து சேவைக்கு விடப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. ஒவ்­வொரு மாத­மும் சுமார் இரு ரயில்­கள் செயல்­பாட்­டிற்கு வரும்.

துவாஸ் பணி­ம­னை­யில் நேற்று முன்­னோட்ட நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்ட போக்கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன், மொத்­தம் 106 புதிய ரயில்­கள் 2026 இறு­தி­வரை அடுத்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு கட்­டங்­கட்­ட­மாக சேவைக்கு விடப்­படும் என்று தெரி­வித்­தார்.

வடக்கு-கிழக்கு ரயில் தடத்­துக்­காக ஆறு புதிய ரயில்­க­ளை­யும் வட்­டப் பாதைக்­காக 23 ரயில்­க­ளை­யும் ஆல்ஸ்­டோம் நிறு­வ­னத்­தி­டம் இருந்து தான் வாங்­கி­ய­தாக ஆணை­யம் கூறி­யது.

வடக்கு-கிழக்கு பாதை­யில் 2024ல் பொங்­கோல் கோஸ்ட் ரயில் நிலை­ய­மும் 2026ல் வட்­டப் பாதை­யில் மூன்று புதிய நிலை­யங்­களும் திறக்­கப்­ப­ட­வுள்­ளன. இட­வ­ச­தியை அதி­க­ரிப்­ப­தற்­காக புதிய ரயில்­கள் சேவைக்கு விடப்­ப­டு­கின்­றன.

புதிய ரயில்­களில் பய­ணி­களுக்கு வச­தியை மேம்­ப­டுத்­தித் தரும் அம்­சங்­கள் இருப்­ப­தாக திரு ஈஸ்­வ­ரன் சொன்­னார்.

சக்­க­ர­நாற்­கா­லி­கள், சைக்­கிள்­கள், குழந்தை தள்­ளு­வண்­டி­களை அனு­ம­திக்­கும் கூடு­தல் இட­வ­ச­தி­யு­டன் ரயில் பெட்­டி­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கூடு­தல் பய­ணி­கள் ரயில்­களில் ஏறு­வ­தற்­காக, குறைந்த இடம் எடுத்­துக்­கொள்­ளும் வகை­யில் இருக்­கை­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய ரயில்­களில் 2.4 மீட்­டர் அக­ல­மு­டைய சன்­னல்­கள் அமை­கின்­றன. நிலத்­துக்கு மேலே பய­ணம் செய்­யும்­போது பய­ணி­களால் சுற்­றுப்­பு­றத்தை நன்­றாக பார்க்க முடி­யும்.

ஜெர்­ம­னி­யில் வடி­வ­மைக்­கப்­பட்டு, சீனா­வில் அமைக்­கப்­பட்ட இந்த ரயில்­களில் ஒவ்­வொரு கத­வுக்­கும் மேலே கூடு­தல் தக­வல்­க­ளைக் கொண்ட 'எல்­சிடி' திரை­கள் உள்­ளன. பய­ணப் பாதை, ரயில் நிலை­யம் தொடர்­பான விவ­ரங்­கள் அந்­தத் திரை­களில் இடம்­பெ­றும்.

ஒவ்­வொரு நாளும் சேவை தொடங்­கு­வ­தற்கு முன்­னர், ரயில்­க­ளின் தயார்­நி­லை­ தானி­யக்க முறை­யில் சோதிக்­கும் முறை இந்த ரயில்­களில் உள்­ளது.

அந்த 106 புதிய ரயில்­களில் 66 ரயில்­களை $1.2 பில்­லி­ய­னுக்கு 2018ல் ஆணை­யம் வாங்­கி­யது.

2020ல் $337.8 மில்­லி­ய­னுக்கு மேலும் 40 ரயில்­களை ஆணை­யம் வாங்­கி­யது.