கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டு வரை சிறை

கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டு வரை சிறை

1 mins read
14f16bbe-1a00-426a-84e7-989b3685a426
-

போதைப்­பு­ழங்­கி­கள் கஞ்சா உள்­ளிட்ட எட்டு வகை­யான போதைப்­பொ­ருள்­களை வைத்­தி­ருந்ததா­கக் குற்­றம் நிரூபிக்கப்பட்டால், அவர்­க­ளுக்கு 30 ஆண்டு வரை சிறைத் தண்­ட­னை­யும் 15 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­ப­ட­லாம். மேலும் கடு­மை­யான தண்­ட­னை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான மசோதா கடந்த மார்ச் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

மோர்­ஃபின், கஞ்சா, போதை­மிகு அபின் உள்­ளிட்ட போதைப்­பொ­ருள்­களை குறிப்­பிட்ட எடைக்கு மேல் வைத்­தி­ருப்­போருக்கு, அடுக்கு அடிப்­ப­டை­யி­லான கட்­ட­மைப்­பைப் பொறுத்து தண்­டனை விதிக்­கப்­படும்.

முதல் அடுக்­கின்­கீழ் 330 கிரா­முக்­குக் குறை­வாக கஞ்சா வைத்­தி­ருப்­போ­ருக்கு அதி­க­பட்­ச­மாக 10 ஆண்டு சிறைத்­தண்­டனை அல்­லது $20,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம். நடு அடுக்­கின்கீழ், 330 கிரா­முக்­கும் 500 கிரா­முக்­கும் இடை­யி­லான எடை கொண்ட கஞ்­சாவை வைத்­தி­ருப்­போர் 10லிருந்து 20 ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­ட­னை­யை­யும், ஐந்­தி­லி­ருந்து பத்து பிரம்­ப­டி­கள் வரை­யி­லும் எதிர்­நோக்­கு­வர்.

500 கிரா­முக்­கும் அதி­க­மான கஞ்­சாவை வைத்­தி­ருக்­கும் ஆக உய­ர­மான அடுக்­கில் வரும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு 20 முதல் 30 ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­ட­னை­யும், 10லிருந்து 15 பிரம்­ப­டி­கள் வரை­யி­லும் விதிக்­கப்­ப­ட­லாம். இதற்கு முன்­னர், எடை­யைக் கருத்­தில் கொள்­ளா­மல் கட்­டுப்­படுத்­தப்­பட்ட போதைப்­பொருள் எத­னை­யும் வைத்­தி­ருந்­த­வர்­களுக்கு அதி­க­பட்­ச­மாக 10 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை அல்­லது $20,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­பட்­டது.