சிங்கப்பூர் சாங்கி விமான நிலையக் குழுமம், நட்டத்திலிருந்து மீண்டு மார்ச் 31 வரை நிதியாண்டில் 33 மில்லியன் வெள்ளி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் அதற்கு $838 மி. இழப்பு ஏற்பட்டது.
கொள்ளைநோய்க்குப் பிறகு நாடுகளுக்கு இடையே எல்லைகள் திறக்கப்பட்டதால் விமானப் போக்குவரத்து அதிகரித்து லாபத்துக்கு வழி வகுத்தது.
கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வருமானமான 0.9 பில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் குழுமத்தின் ஒட்டுமொத்த வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்து 1.9 பில்லியன் வெள்ளியைத் தொட்டுள்ளது.
சாங்கி விமான நிலையம் வழியாகச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து கொள்ளைநோய்க்கு முந்திய காலத்தில் இருந்த நிலையில் 82 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது, இவ்வாண்டு மார்ச் மாத நிலவரமாகும்.
2023 நிதியாண்டில் பயணி களின் நடமாட்டம் 42.6 மில்லியனுக்கு அதிகரித்தது.
இது, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிட்டால் எட்டு மடங்கு உயர்வாகும்.