சிங்கப்பூர் பேருந்து ஓட்டுநர்: சலுகை விலையில் உள்ள டீசலைத் தவறாகப் பயன்படுத்தவில்லை

மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு நக­ரில் இருக்­கும்­போது சலுகை விலை­யில் வழங்­கப்­படும் 500 லிட்­டர் அள­வி­லான டீச­லைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தாக சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த பேருந்து ஓட்­டு­நர் ஒரு­வர் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றார்.

24 வயது பெஞ்­ச­மின் லோ யோங் பாங் என்ற சந்­தேக நப­ரி­டம் டீசல் இருந்­தி­ருக்­கிறது. அது சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த சுற்­றுலா பேருந்­தில் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

ஜோகூர் பாரு­வின் ஜாலான் கெம்­பாஸ் பாரு பகு­தி­யில் இருக்­கும் பெட்­ரோல் நிலை­யத்­தில் சட்­ட­வி­ரோ­த­மாக டீச­லைப் பயன்­படுத்­தி­ய­தற்­கான பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. அவற்றுக்கு லோதான் பொறுப்பு என்று நம்பப்படுகிறது. இச்­சம்­ப­வம் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று நிகழ்ந்­தது.

இந்த விவ­கா­ரத்­துக்­கான நீதி­மன்ற விசா­ரணை தன்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை லோ மறுத்­தார். விநி­யோ­கக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்­தின்­கீழ் லோ மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்டுள்ளன.

அவை நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு அதி­க­பட்­ச­மாக ஒரு மில்­லி­யன் ரிங்­கிட் அப­ரா­த­மும் (293,000 வெள்ளி) மூவாண்­டுச் சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!