சாலையில் தீப்பிடித்துக்கொண்ட டாக்சி; யாரும் காயமடையவில்லை

சாலையில் தீப்பிடித்துக்கொண்ட டாக்சி; யாரும் காயமடையவில்லை

1 mins read
1706ba59-31cc-496f-b277-8f5bdb26948e
-

ஈசூன் ஸ்தி­ரீட் 11ல் டாக்சி ஒன்று தீப்­பி­டித்­துக்­கொண்­டது. குடி­மைத் தற்­காப்­புப் படை­யினர் தீயை அணைத்­த­னர். இச்­சம்­ப­வம் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று நிகழ்ந்­தது. யாரும் காய­ம­டை­ய­வில்லை.

சம்­ப­வம் பதி­வான 18 வினாடி காணொளி பெ சியா லொர் - சிங்­கப்­பூர் ரோட் (Beh Chia Lor - Singapore Road) ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முன்­தி­னம் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது. நீல நிற கம்­ஃபர்ட்­டெல்­குரோ டாக்­சி­யின் முன்­பு­றம் தீப்­பி­டித்து எரிந்­தது அந்­தக் காணொ­ளி­யில் பதி­வா­னது. அதற்­குப் பிறகு ஒரு பெரிய வெடிப்­புச் சத்­தம் காணொ­ளி­யில் கேட்­டது; அதற்குப் பிறகு தீ கொழுந்­து­விட்டு எரி­யத் தொடங்­கி­ய­தும் பதி­வா­னது.

ஈசூன் ஸ்தி­ரீட் 11க்கு அருகே உள்ள வீவக புளோக் 149க்குப் பக்கத்தில் இச்­சம்­ப­வம் நேர்ந்­தது. இது­கு­றித்து செவ்­வாய்க்­கி­ழமை காலை 6.40 மணி­ய­ள­வில் சிங்கப்பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்­குத் தக­வல் வந்­தது.