2022ல் சாதனை: கிளமெண்டி காவல்துறை பிரிவுக்கு விருது

2022ல் சாதனை: கிளமெண்டி காவல்துறை பிரிவுக்கு விருது

1 mins read
6c9d5015-76a2-4aea-986e-981210b4d656
-

காவல்­துறை தின அணி­வ­குப்பு நேற்று நடந்­தது. அதில் தலை­சி­றந்த தரைப் பிரி­வாக கிளமெண்டி காவல்­துறை பிரிவு முடி­சூட்­டப்­பட்­டது.

இத்­து­டன் 11வது முறை­யாக அந்­தப் பிரிவு இந்த விருதை வென்­றி­ருக்­கிறது.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று அந்த விருதை வழங்­கி­னார். உள்­து­றைக் குழு பயி­ல­கத்­தில் நடந்த அந்த நிகழ்ச்­சி­யில் சுமார் 650 அதி­காரி­களும் பேரணி அணி­வ­குப்­பா­ளர்­களும் கலந்­து­கொண்­ட­னர். 2,000 பார்வை­யா­ளர்­கள் திரண்­டி­ருந்­தனர்.

வீடு ஒன்­றின் குளி­ய­ல­றை­யில் ஒரு மாதைக் காப்­பாற்­றி­யது முதல் சென்ற ஆண்­டில் பல சாத­னை­க­ளைச் செய்து கிள­மெண்டி காவல்­துறை பிரிவு விருதை வென்­றி­ருக்­கிறது.

அறி­வுத்­தி­றன் குறைந்த பதின்ம வயது பெண் ஒரு­வரை வெற்­றி­க­ர­மான முறை­யில் லாவண்­ட­ர் ஸ்திரீட்டில் உள்ள ஒரு ஹோட்­டல் அறை­யில் கிள­மெண்டி அதி­காரி­கள் கண்­டு­பிடித்­த­னர்.

கடை­களில் பொருள்­களை வாங்­கு­வது போல் நடித்து திருடும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­ததை அடுத்து பாது­காப்பு பற்­றிய புரிந்­து­ணர்வை மேம்­படுத்த அந்­தப் பிரி­வின் அதி­கா­ரி­கள் உத­வினர்.­ விமான நிலைய காவல்துறை பிரிவு, ஜூரோங் காவல்துறை பிரிவு உள்ளிட்ட இதர பிரிவுகளுக்கும் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்­சி­யில் பேசிய துணைப் பிர­த­மர், காவல்­துறை அதி காரியின் பணி எளி­தா­ன­தல்ல. குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுப்­ப­தில், கண்­டு­பி­டிப்­ப­தில் ஏரா­ள­மான சவால்­களை அன்­றா­டம் வெற்றி­க­ர­மான முறை­யில் அவர்­கள் சமா­ளிக்­கி­றார்­கள் என்றார்.

துணிச்­சல், அர்ப்­ப­ணிப்பு உணர்வு, நிபு­ணத்­து­வம் ஆகி­ய­வற்றை வெளிப்­ப­டுத்­தும் காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு அவர் நன்றி கூறினார்.