உலக உளவுத்துறைத் தலைவர்கள் ரகசியக் கூட்டம் நடத்தினர்

உலக உளவுத்துறைத் தலைவர்கள் ரகசியக் கூட்டம் நடத்தினர்

1 mins read
5ce21d0b-3bb5-46da-8ac8-aba0fe778482
-

சிங்­கப்­பூ­ரில் ஷங்­ரிலா தற்­காப்பு உச்­ச­நிலை கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்று வரு­வ­தற்­கி­டையே உல­கின் பிர­தான உள­வுத்­துறை தரப்­பு­க­ளைச் சேர்ந்த மூத்த அதி­கா­ரி­கள் ரக­சி­யக் கூட்­டம் ஒன்­றைக் கடந்த வார­இ­று­தி­யில் நடத்­தி­ய­தாக ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னச் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

தற்­காப்பு மாநாடு நடை­பெ­றும் அதே­வே­ளை­யில் இத்­த­கைய கூட்­டங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் அர­சாங்­கம் பல ஆண்­டு­க­ளாக ஏற்­பாடு செய்­து­வந்­துள்­ள­தா­க­வும் அந்­தக் கூட்­டங்­கள் வேறு இடத்­தில் நடந்து வரு­வ­தா­க­வும் ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் விளக்­கி­யது.

இது­போன்ற கூட்­டம் குறித்து இதற்­கு­முன் செய்­தி­கள் வெளி­யி­டப்­பட்­ட­தில்லை.

அமெ­ரிக்­கா­வைப் பிர­தி­நி­தித்து தேசிய உள­வுத்­துறை இயக்­கு­நர் எவ­ரல் ஹேய்ன்ஸ் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது. சீனா­வும் இந்­தி­யா­வும் இந்த ரக­சி­யக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே ஒத்­து­ழைப்­பும் ஒருங்­கி­ணைப்­பும் இந்த ரக­சி­யக் கூட்­டத்­தின் நோக்­கமே தவிர மோத­லுக்கு வழி­வ­குப்­பது அன்று என ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­திற்­குத் தக­வல் தெரி­வித்­தோர் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.