தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தண்ணீர் சிக்கனத் திறன் நிதிக்கு $5 மில்லியன்

2 mins read
1b950473-acb9-4e34-a6f4-814111f13b78
-

நாட்­டின் அத்­தி­யா­வ­சிய தேவை­யான நீரைப் பாது­காக்­கும் அர­சாங்க நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகு­தி­யாக நீர் மறு­சு­ழற்சி திட்­டங்­க­ளுக்கு கூடு­தல் நிதி ஒதுக்­கப்­ப­டுகிறது.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கம், ஜூலை 1ஆம் தேதி­யி­லி­ருந்து தண்­ணீர் சிக்­க­னத் திறன் நிதியை ஒரு மில்­லி­யன் வெள்­ளி­யி­லி­ருந்து அதி­க­பட்­ச­மாக ஐந்து மில்­லி­யன் வெள்ளி வரை அதி ­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்த நிதி, குறிப்­பாக நிறு­வ­னங்­களை நோக்­க­மா­கக் கொண்­டது. 2065ஆம் ஆண்­டு­வாக்­கில் சிங்­கப்­பூ­ருக்­குத் தேவைப்­படும் மொத்த நீரில் அறு­பது விழுக்­காட்டை வீடு­கள் அல்­லாத இதர துறை­கள் பயன்­ப­டுத்­தும் என்­பதே இதற்கு கார­ணம்.

நிறு­வ­னங்­கள் கவ­ன­மாக நீரைப் பயன்­ப­டுத்­த­வும் நாட்­டின் பற்­றாக்­கு­றை­யான நீரை மறு­சு­ழற்சி செய்­ய­வும் இந்த நிதி பயன்­ப­டுத்­தப்­படும்.

தேசிய நீர் முக­வை­யான பொதுப் பய­னீட்­டுக் கழ­கம், நீடித்த நீர் வளத்தை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­களில் ஒன்­றாக நிதி ஒதுக்கீட்டை அதி­க­ரித்­துள்­ளது.

அலு­வ­ல­கக் கட்­டடங்­கள், ஹோட்­டல்­கள், தொழிற்­சா­லை­கள் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய துறை, தற்­போது குடி­ய­ர­சின் நீர் தேவை­யில் 55 விழுக்­காட்­டைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்த நிலை­யில் சிங்­கப்­பூ­ரின் தண்­ணீர் தேவை 2065ஆம் ஆண்­டில் இரண்டு மடங்­கு அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப் படு­கிறது.

மற்­றொரு மாற்­ற­மாக ஜூலை­யி­லி­ருந்து தண்­ணீரை சேமிக்க உத­வும் திட்­டங்­க­ளைக் கண் டறிந்து செயல்­ப­டுத்­தும் நிறு­ வனங்­க­ளுக்கு அவற்­றுக்­கான செல­வில் 70 விழுக்­காட்டை பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் வழங்­கும். இது, அதி­க­பட்­ச­மாக 30,000 வெள்ளி வரை இருக்­கும் தற்­போது 50 விழுக்­காடு நிதி மட்­டுமே வழங்­கப்­ப­டு­கிறது.

தண்­ணீர் சிக்­க­னத் திறன் நிதி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது குறித்து சிங்­கப்­பூர் அனைத்­து­லக நீர் வார மாநாட்­டில் பேசிய நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ தெரி­வித்­தார்.

நிதி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால் நீர்ச் சேமிப்பு திட்­டங்­களில் நிறு­வ­னங்­கள் முனைப்­பு­டன் ஆர்­வம் காட்­டும் என்­றார் அமைச்­சர்.

குறைந்­தது, மாதம் 1,000 கன மீட்­டர் அளவு தண்­ணீ­ரைப் பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­கள் மறு­சு­ழற்சி நிதிக்­குத் தகுதி பெறு­கின்­றன.

கிளார்க் கீயில் உள்ள பேரடாக்ஸ் சிங்­கப்­பூர் மர்ச்­சண்ட் கோர்ட் ஹோட்­ட­லில் நேற்று தொடங்­கிய அனைத்­து­லக நீர் வார மாநாடு அடுத்த மூன்று நாள்­க­ளுக்கு நடை­பெ­று­கிறது.