விமானங்களில் பயணிகளின் பிரச்சினை சம்பவங்கள் 47 விழுக்காடு அதிகரிப்பு

2 mins read
63b9901f-e7a5-414e-a537-f6c6290339d2
-

2020ஆம் ஆண்­டில் உல­கெங்­கி­லும் உள்ள விமா­னங்­களில் பய­ணி­கள் பிரச்­சி­னை­கள் ஏற் படுத்­திய சம்­ப­வங்­கள், முந்­தைய ஆண்­டைக் காட்­டி­லும் 50% அதி­க­ரித்தது என்று அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்து சங்­கம் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

2022ல் ஒவ்­வொரு 568 விமானங்­க­ளுக்கும் ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

இது, 2021ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் 47 விழுக்­காடு அதி­கம். 2021ல் ஒவ்­வொரு 835 விமா­னங்­க­ளுக்கும் ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

பொது­வான சம்­ப­வங்­க­ளான விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் நடப்­பது, ஊழி­யர்­க­ளைத் திட்­டு­வது மற்­றும் அள­வுக்கு அதி­க­மாக மது அருந்­து­வது போன்­றவை இவற்­றில் அடங்­கும் என்று உல­க­ளா­விய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைப்பு கூறி­யது.

அந்த அமைப்பு உல­க­ளா­விய விமா­னப் போக்­கு­வ­ரத்­தில் 83 விழுக்­காட்டை உள்­ள­டக்­கிய சுமார் 300 விமான நிறு­வ­னங் ­க­ளைப் பிர­தி­நி­திக்­கிறது.

2022ஆம் ஆண்­டில் பெரும் பாலான கட்­டாய முகக்­க­வ­சம் அணி­யும் விதி­முறை அகற்­றப் பட்ட பிறகு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றாத சம்­ப­வங்­கள் குறைந்­தன என்று போக்­கு­வ­ரத்து சங்­கம் குறிப்­பிட்­டது.

கழி­வ­றை­களில் புகை பிடித்­தல், இருக்கை வார் அணி­யும் உத்­த­ர­வு­க­ளைப் பின்­பற்­றா­தது, உடை­மை­களை அதற்­கு­ரிய இடத்­தில் வைக்­கத் தவ­று­தல். இவை­யும் விதி­மு­றை­க­ளுக்கு இணங்­காத சம்­ப­வங்­களில் அடங்­கும்.

விமான ஊழி­யர்­க­ளி­டம் தவறான முறை­யில் நடந்­து­கொள்­ளும் சம்­ப­வங்­கள் மிக­வும் அரி­தா­கவே நடந்­து­வந்த சூழ­லில், 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2022ல் இச்­சம்­ப­வங்­கள் 61 விழுக்­காடு அதி­க­ரித்­தன.

இத­னால் சங்­கம் தன்­னு­டைய உறுப்­பி­னர்­களை மாண்டி யோல் நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்ற வலி­யு­றுத்­தி­யது.

இந்த நெறி­முறை, இது போன்ற சம்­ப­வங்­கள் குறித்து வழக்­குத் தொடர அதிக அதி­கா­ரங்­களுக்கு வழி வகுக் கிறது.

எம்பி14 என்­றும் அழைக்­கப் படும் நெறி­முறை, பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி விமான ஊழி­யர்­களை தகாத வார்த்தை களால் பேசும் பய­ணி­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க உறுப்பு நாடு­க­ளுக்கு அதி­கார மளிக்­கிறது.

பய­ணி­க­ளின் சொந்த ஊர் எது­வாக இருந்­தா­லும் அவர்­க­ளது தகாத செயல்­க­ளுக்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க சட்­ட­பூர்வ அதி­கா­ரம் அர­சாங்­கங்­க­ளுக்கு இருப்­ப­தை­யும் இது உறுதி செய்­கிறது.

இது­வரை சிங்­கப்­பூர் உட்­பட 45 நாடு­களில் எம்பி14 பயன் படுத்­தப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய நாடு­கள், உலக பய­ணி­க­ளின் போக்­கு­வ­ரத்­தில் 33 விழுக்­காட்டை கொண்­டுள்­ளன.

சங்­கத்­தின் துணை இயக்கு நரான ஜென­ரல் கான்­ராட் கிளி­ஃபர்ட், தொந்­த­ர­வு­ விளை­விக்­கும் பய­ணி­க­ளின் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­பது கவலை அளிக்­கிறது என்­றார்.

பய­ணி­கள், விமான ஊழி­யர்­கள் இரு தரப்­பி­ன­ருக்­கும் பாது­காப்­பான, தொந்­த­ரவு இல்­லாத பய­ணங்­க­ளுக்கு உரிமை உள்­ளது என்று அவர் மேலும் கூறி­னார்.