தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஎன்ஏ ஒளிப்பதிவாளர் விபத்தில் மரணம்

1 mins read
a55bffa4-6664-4c82-8cf2-6fc39502c091
-

மலே­சி­யா­வில் உள்ள கராக்-கோலா­லம்­பூர் நெடுஞ்­சா­லை­யில் நிகழ்ந்த மோட்­டார் சைக்­கிள் விபத்­தில் சிஎன்ஏ செய்தி நிறு­வ­னத்­தின் ஒளிப்­ப­தி­வா­ளர் மர­ண­ம­டைந்­தார். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்தது.

45 வயது திரு கைரூல் ஸைனு­தீன் (படம்) கோலா­லம்­பூ­ரில் பணி­பு­ரிந்து வந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பாகாங் மாநி­லத்­தின் தலை­ந­கர் குவாந்­தா­னுக்­குச் சென்று தமது பெற்­றோ­ரைப் பார்த்­து­விட்டு தமது மனை­வியை அழைத்­துக்­கொண்டு வீடு திரும்ப கோலா­லம்­பூர் விமான நிலை­யத்­துக்கு அவர் மோட்­டார் சைக்­கி­ளில் சென்­று­கொண்­டி­ருந்­தார்.

அப்­போது தமது மோட்­டார் சைக்­கி­ளின் கட்­டுப்­பாட்டை திரு கைரூல் இழந்­த­தா­க­வும் சாலைத் தடுப்­பில் மோதி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சாலைத் தடுப்பு மீது மோதி­யதை அடுத்து அவர் எதிர்த்­திசை செல்­லும் சாலைத் தடத்­துக்­குத் தூக்கி எறி­யப்­பட்­டார்.

அப்­போது அவ்­வ­ழி­யா­கச் சென்­று­கொண்­டி­ருந்த இன்­னொரு மோட்­டார் சைக்­கிள் அவர் மீது மோதி­யது.

திரு கைரூ­லுக்கு தலை­யில் மிக மோச­மான காயங்­கள் ஏற்­பட்­டன. அவர் சம்­பவ இடத்­தில் மாண்­டார். திரு கைரூ­லின் மர­ணம் மீளாத் துயரை ஏற்படுத்தியிருப்பதாக மீடி­யா­கார்ப் தெரிவித்தது. அவ­ரது குடும்­பத்­தா­ருக்கு அதன் ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளைத் அது தெரி­வித்­துக்­கொண்­டது.