சாங்கி விமான நிலையத்தில் சேவை வழங்கும் சேட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேற்பார்வையாளரிடம் $1,825 லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக தீயணைப்புக் கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் இயக்குநருக்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றம் புரிந்தபோது இங் கியான் தியோங் (படம்) அக்ரோஃபயர் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார்.
சேட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேற்பார்வையாளரான லிம் கூன் சுவானிடம் லஞ்சம் கொடுக்க ஏடி சர்விசஸ் நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்த சூ சின் சுவானிடம் இங் $3,650 லஞ்சம் தந்தார்.
லிம்மிடம் சூ $1,825 கொடுத்தார். மீதமுள்ள பணத்தை சூ வைத்துக்கொண்டார்.
இந்நிலையில், லஞ்சம் கொடுத்த குற்றத்தை 51 வயது இங் நேற்று ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

