பாதுகாப்பான கணினிக் கட்டமைப்பு: சிங்டெல், எஸ்பிடெல் ஆர்வம்

பாதுகாப்பான கணினிக் கட்டமைப்பு: சிங்டெல், எஸ்பிடெல் ஆர்வம்

1 mins read
ea28e210-f953-4d46-a992-9b92ba37966e
-

சிங்­டெல் நிறு­வ­ன­மும் எஸ்டி எஞ்­சி­னி­ய­ரிங், எஸ்பி குழு­மத்­தின் கூட்டு நிறு­வ­ன­மான 'எஸ்­பி­டெல்'லும் தேசிய அள­வில் தொழில் நிறு­வ­னங்­க­ளுக்­கான 'குவான்­டம் சேஃப்' எனும் துளி­மப் பாது­காப்­புக் கணி­னிக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டங்­க­ளைத் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தி­டம் சமர்ப்­பித்­துள்­ளன.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று நடந்த 'ஏஷியா டெக் - சிங்­கப்­பூர் சோஷி­யல்' நிகழ்ச்­சி­யில் தேசிய துளி­மப் பாது­காப்­புக் கட்­ட­மைப்­பின் புதிய நிலையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

தொடர்பு, தக­வல் அமைச்சு மற்­றும் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் மின்­னி­லக்க இணைப்பு வரை­வுத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இக்­கட்­ட­மைப்பு இடம்­பெ­று­கிறது.

துளி­மக் கணிப்­புத் தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு வழக்­க­மான கணி­னி­க­ளால் விடை­காண சிக்­க­லாக இருக்­கும் பிரச்­சி­னை­களைத் தீர்க்க இய­லும் எனக் கூறப்­ப­டு­கிறது. அத்­து­டன், பாது­காப்­பான தொடர்­பு­க­ளு­க்கான நடப்­பி­லுள்ள மறைக்­கு­றி­யீ­டு­க­ளா­லான கணினி நிரல் நெறி­மு­றை­களை உடைக்­க­வும் இத­னால் முடி­ய­லாம் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

நாடு முழு­வ­தும் துளி­மப் பாது­காப்­புத் தொடர்­புத் தொழில்­நுட்­பத்­தைச் சோதித்­துப் பார்க்­கும் வகை­யில் தேசிய துளி­மப் பாது­காப்­புக் கட்­ட­மைப்பு சென்ற ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக ஆணை­யம் கூறி­யது.

முன்­ன­தாக, 'ஐடி குவான்­டிக்' எனும் சுவிட்­சர்­லாந்து துளிம இணை­யப் பாது­காப்பு நிறு­வ­னத்­து­டன் சிங்­டெல் நிறு­வ­னம் நேற்று முன்­தி­னம் ஒரு புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் கையெ­ழுத்­திட்­டது.