தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையால் ஐந்து பேருந்து சேவைகள் பாதிப்பு

1 mins read
4f3d0b12-a62b-4912-a497-3370b3cd834e
-

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்புக்கான கூட்டு ஒத்திகைகளால் ஜூன் 10, 17, 24 என இம்மாதத்தின் மூன்று சனிக்கிழமைகளில் ஐந்து பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படும்.

சேவை எண் 61, 75, 960, 960e, 961 ஆகிய பேருந்துகள், பீச் ரோடு, பிராஸ் பசா ரோடு, எஸ்பிளனேட் டிரைவ், ஃபுல்லர்ட்டன் ரோடு, நார்த் பிரிட்ஜ் ரோடு, பார்லிமென்ட் பிளேஸ், ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் பொலிவார்ட், ராபின்சன் ரோடு ஆகிய சாலைகளில் உள்ள சில பேருந்து நிறுத்தங்களில் நிற்காது என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில பேருந்து நிறுத்தங்களில் முழு நாளுக்கும் பேருந்துகள் நிற்காமல் செல்லும். வேறு சில நிறுத்தங்களில் காலை 8 மணியிலிருந்து இரவு 11.59 மணி வரையிலும், பிற்பகல்

1 மணியிலிருந்து இரவு

8 மணி வரையிலும், அல்லது பிற்பகல் 1 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் பேருந்துகள் நிற்காது.