ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக
31 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். வாகன உரிமையாளரின் சம்மதமின்றி வாகனம் ஓட்டிய குற்றத்தையும் அவர் புரிந்துள்ாளர்.
ஈசூனில் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து அவரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
சாலையோர விளக்குக் கம்பம் ஒன்றின்மீது வெண்ணிற கார் ஒன்று மோதியதால் காரின் 'பம்பர்' உடைந்து விழுந்ததை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி காட்டியது. சேதமடைந்த வாகனத்தை இழுத்துச் செல்வதற்கான வாகனம் ஒன்றும் சம்பவ இடத்தில் காணப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' கேட்டறிந்தது.
ஈசூன் அவென்யூ 6ல் காரும் வேனும் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்திருப்பதாக திங்கட்கிழமை இரவு 7.30 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட வேளையில் 32 வயது வேன் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகவும் அது குறிப்பிட்டது.

